
நாம் அனைவரும் ஆம்புலன்சின் சைரன் சத்தம் கேட்டவுடன் நம் வாகனத்தை இடது புறமாக ஒதுங்கி வழிவிடுவோம். காரணம் சிறு தாமதம் கூட ஒரு உயிரை பறித்து விடும் என்பதற்காக. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் மாட்டி கொள்வதையும் நாம் பார்க்க நேரிடும். அப்படிப்பட்ட சூழல் நம்மில் பலர் களத்தில் இறங்கி போலாக்குவரது நெரிசலை சரி செய்வோம். இல்லையென்றால் போக்குவரத்து காவலர் உடனடியாக வந்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்துவார்.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் கேரளாவில் அரங்கேறியுள்ளது
திருச்சூரில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அபர்ணா லவக்குமார் . இவர், அண்மையில் திருச்சூர் பகுதியில் இருந்த போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியவில்லை. உடனே போக்குவர்தது சீரமைப்பு பணியில் இருந்து அபர்ணா லவக்குமார் ஆம்புலன்ஸ் விரைந்து செல்லும் வகையில், முன்னே சென்ற வாகனங்களை அந்த பெண் காவல் அதிகாரி ஓடிச் சென்று வழி விடுமாறு கூறினார். அவரைத் தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் முன்னேறி சென்றது. போக்குவரத்து நெரிசலின் போது அவசரகாலத்தில் நோயாளியை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் முன் அபர்ணா ஓடும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறை உயர் அதிகாரிகள் அந்தப் பெண் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அபர்ணா லவக்குமாரை அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.
திருச்சூர் சம்பவத்திற்கு அபர்ணாவின் பதில் என்னவென்றால், காவல்துறையில் உள்ள எந்தவொரு போலீஸும் தான் செய்த அதே காரியத்தைச் செய்திருப்பார்கள். அபர்ணா தனது செயல்களுக்காக கைதட்டல்களைப் பெறுவது இது முதல் முறை அல்ல. அவர், கடந்த 2019 - ஆம் ஆண்டு புற்று நோயால் பாதித்த நபருக்கு உதவுவதற்காக தனது தலை முடியை தானமாக வழங்கியுள்ளார். சிகிச்சையின் போது இறந்த ஒரு பெண்ணின் உடல் பணப் பற்றாக்குறையால் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாதபோது, அபர்ணா தனது தங்க வளையலைக் கழற்றி உறவினர்களிடம் அடகு வைத்தார். அதேபோல், காவல் துறையில் பணி புரிந்து கொண்டு, பள்ளி மாணவர்கள் இடையே சமூகம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வளவு சமூக பொறுப்புணர்வு மிக்க காவல்துறை அதிகாரி அபர்ணா ரவிக்குமாருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.