வயிற்று வலி என நினைத்தார்.. ஆனால் உள்ளே இருந்தது 'இதுதான்'..! அரசு மருத்துவமனையின் மெத்தனத்தால் நேர்ந்த விபரீதம்..!

Operation
Operation
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவருக்கு, சிகிச்சை முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரது வயிற்றுக்குள் 'அறுவை சிகிச்சை துணி' இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டின் இறுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் அடிக்கடி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். எனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட மருத்துவமனையில் சென்று காண்பித்தார். அங்கு கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் தவறுதலாக வயிற்றுக்குள் விடப்பட்ட அறுவை சிகிச்சை துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஇது மருத்துவத் துறையின் உச்சக்கட்ட அலட்சியத்தைக் காட்டுகிறது.

தொடரும் அவலங்கள் - கத்தரிக்கோல் விவகாரம்:

பொதுவாகவே அரசு மருத்துவமனைகளை பற்றிய தவறான அபிப்பிராயம் இருந்து வருகிறது. முறையான பரிசோதனை இல்லாமை, சிகிச்சை தாமதம், சுகாதாரமற்ற சூழல், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அலட்சியம் ஆகியவை நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியப் போக்கு போன்றவற்றால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வசதி இருப்பவர்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி செல்கின்றனர்.இப்படி அடிக்கடி அரசு மருத்துவமனையில் நிகழும் நிகழ்ச்சிகள் அரசு மருத்துவமனையின் மீதுள்ள நம்பிக்கையை முழுவதுமாக போக்கி வருகிறது.

இதே போல் கேரளாவில் 5 ஆண்டுகளாக வயிற்றுக்குள் கத்திரிக்கோலை சுமந்து கொண்டு வலி, வேதனையுடன் வாழ்ந்த பெண்ணுக்கும் அரசு மருத்துவமனையால் தான் இந்த வேதனை நிகழ்ந்துள்ளது. அவர் அறுவை சிகிச்சையின் பக்க விளைவு என நினைத்து வலி அதிகரிக்கும் போதெல்லாம் மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு நாட்களை கடத்தி உள்ளார். வயிற்று வலி மிகவும் கடுமையாகப் போகவே மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்-ரே பரிசோதனையில் வயிற்றில் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தரிக்கோல் இருப்பது தெரிய வந்ததுள்ளது. அறுவை சிகிச்சையின் பொழுது தவறுதலாக கத்தரிக்கோலை வயிற்றிலே வைத்து தையல் போட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டனத்துக்குரியது. இது அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கை படம் பிடித்து காட்டுகிறது. இனியாவது அரசு மருத்துவமனைகள் விழிப்புடன் செயல்படுமா?

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் ‘இரட்டை’ இடி! தங்கம் மற்றும் சிலிண்டர் விலை தடாலடி உயர்வு..!
Operation
logo
Kalki Online
kalkionline.com