.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
சென்னையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பிததுள்ளது.
அத்துடன் ஆம்னி பேருந்துகள் போரூரில் பயணிகளை ஏற்றி இறக்கவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் சென்னை போரூர் சுங்கச்சாவடி, சூரப்பேடு ,மாதவரம் ரவுண்டானா ஆகிய இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி மாநில போக்குவரத்து ஆணையம் அளித்த உத்தரவு படி சென்னை கோயம்பேடு , சூரப்பேடு , மாதவரம் ரவுண்டானா பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக்கொள்ள இடைக்கால அனுமதி வழங்கியும் , தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்ல வேண்டும் என்றும் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது . அதில் ஒரு குறிப்பிட்ட வழிதடத்தில் பேருந்துகளை இயக்க உரும உரிமம் வழங்கிய பிறகு அதை தடுக்க முடியாது என்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
ஆம்னி பேருந்துகளை திடீரென கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கக் கட்டாயப்படுத்துவது பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற நடைமுறைகளைத் தடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், போரூர் சுங்கச்சாவடி அல்லது சூரப்பேடு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவதைப் போல, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள இடத்தையும் பயன்படுத்துவது என எடுக்கப்பட்ட முடிவை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும் எனவும் உத்தரவு தெரிவிக்கிறது.
இந்த உத்தரவு கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.