#JUST IN: ரூ.1 லட்சத்துக்கு கீழே வரப்போகும் தங்கம்.! ஒரே நாளில் ரூ.10,000 சரிவு.!

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு, தொழில்துறை பயன்பாடு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது.
Gold Jewellery
Gold Jewellery
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. சாமானியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்தது தங்கத்தின் விலை. இருப்பினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.

அடுத்த 1 வருடத்திற்கு பொதுமக்கள் யாரும் தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 15 சதவிகிதமாக உயர்ந்தது. இதனையடுத்து வெள்ளி இறக்குமதி செய்ய மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

நேற்று (ஜூன் 5) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000-ம் குறைந்தது. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,15,440-க்கும், ஒரு கிராம் ரூ.14,430-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிலோ ரூ.2,80,000-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு, தொழில்துறை பயன்பாடு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூன் 6) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1840 குறைந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.230 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.

Gold and Silver Rates
Gold and Silver
இதையும் படியுங்கள்:
#BREAKING: அடுத்த தேர்தலில் நம் கட்சி நிச்சயமாக போட்டியிடும்! அண்ணாமலை அதிரடி.!
Gold Jewellery

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 5: 1 கிராம் - ரூ.14,430 1 சவரன் ரூ.1,15,440

ஜூன் 4: 1 கிராம் - ரூ.14,480 1 சவரன் ரூ.1,15,840

ஜூன் 3: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000

ஜூன் 2: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000

ஜூன் 1: 1 கிராம் - ரூ.14,500 1 சவரன் ரூ.1,16,000

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூன் 5: 1 கிராம் - ரூ.280

ஜூன் 4: 1 கிராம் - ரூ.285

ஜூன் 3: 1 கிராம் - ரூ.290

ஜூன் 2: 1 கிராம் - ரூ.290

ஜூன் 1: 1 கிராம் - ரூ.290

இதையும் படியுங்கள்:
போலீசுக்கு விழுந்த அதிரடி உத்தரவு! இனி ‘இப்படி’ நடந்தா அவ்ளோதான்!
Gold Jewellery
logo
Kalki Online
kalkionline.com