தனக்கு புற்றுநோய் இருப்பதை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிவித்ததன் பின்னணி என்ன?

King Charles iii
King Charles iii

ங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 

இதுகுறித்து, அரண்மனை பிப் 5ம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ”விரிவடைந்த புரோஸ்டேட் சுரப்பி தொடர்பாக மன்னர் சார்லஸுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ செயல்முறையில், அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கிறது. அதனால், பொதுவெளியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியிருக்கின்றனர்.

King Charles iii
King Charles iii

அதேசமயம், இந்தக் காலகட்டத்தில் அரசு வணிகம் உள்ளிட்ட தனது வழக்கமான பணிகளையும் அவர் மேற்கொள்வர். தன்னுடைய சிகிச்சை பற்றி மன்னர் மிகவும் நேர்மறையாக இருக்கிறார். விரைவில் முழுமையாக பொதுப்பணிக்குத் திரும்புவார்.

King Charles iii
King Charles iii

உலகிலுள்ள அனைவருக்கும் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், தனக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அவர் அறிவித்திருக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், மன்னர் சார்லஸ் என்ன வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும், அது பாதிப்பு எந்த கட்டத்தில் உள்ளது என்று அரண்மனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அதேநேரம், இங்கிலாந்து நாட்டில் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவை என்று கணித்து மைக்கேல் டி நோஸ்திரதாம் என்பவர் எழுதிவைத்த புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சம்பவம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

மைக்கேல் டி நோஸ்திரதாம் புத்தகத்தில், தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அபகரிக்கப்படுவார்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில், தீவுகளின் மன்னர் என்பது சார்லஸைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹாரியைக் குறிப்பிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி எப்போது, எங்கு நடந்தது தெரியுமா?
King Charles iii

இதனால், அரசு குடும்பத்தில் இருந்து விலகியுள்ள ஹாரியின் பெயர் மீண்டும் இங்கிலாந்து மக்களிடத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com