நயினார் இல்லத்தில் எல்.முருகன்..! - பிரதமர் வருவதற்கு முன் அவசர ஆலோசனை..!!

l murugan - nainar nagendran
l murugan - nainar nagendran
Updated on

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். பிரதமர் இன்று மாலை வரக்கூடிய நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வந்திருக்கிறார். இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் உறுதியாகி விடும் என்றும், பிரதமர் மோடியின் வருகை சம்பந்தமாகவும் இரு தலைவர்களும் அமர்ந்து பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகத் தான் தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வந்திருக்கிறார். பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் இறுதியாகி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com