மழை பெய்தும் நிரம்பாத ஏரிகள் - வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!

Lakes
LakesImg Credit: Wikimedia
Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தும் ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. எனவே பருவமழை தொடங்கும் முன்பு வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 தாலுகா பகுதிகளில் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) கட்டுப்பாட்டின்கீழ் சிறிய மற்றும் பெரிய என 49 ஏரிகள் உள்ளன. மேலும் ஆண்டியப்பனூரில் 112 கனஅடி கொள்ளளவு கொண்ட நீர் தேக்கமும் உள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்திய கடுமையான வெயிலின் காரணமாக வெகுவாக குறைந்தது. இவற்றில் சில ஏரிகள் வறண்டு பாலைவனம் போல காட்சி அளித்தன. மேலும் கிணறுகளின் நீர்மட்டமும் குறைந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து வர தொடங்கியது. இதனால் ஏரிகளில் நீர்மட்டம் சற்று அதிகரித்து உள்ளது. இதில் 80 சதவீத அளவிற்கு 1 ஏரியும், 70 சதவீத அளவிற்கு 2 ஏரியும், 60 சதவீத அளவிற்கு 2 ஏரியும், 50 சதவீத அளவிற்கு 2 ஏரியும், 40 சதவீத அளவிற்கு 8 ஏரியும், 30 சதவீத அளவிற்கு 6 ஏரியும், 25 சதவீத அளவிற்கு 3 ஏரியும், 20 சதவீத அளவிற்கு 10 ஏரியும், 15 சதவீத அளவிற்கு 1 ஏரியும், 10 சதவீத அளவிற்கு 14 ஏரிகளிலும் நீர் உள்ளது. ஆண்டியப்பனூர் நீர்தேக்கத்தில் 81.21 கனஅடி நீரும் உள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய ஏரியாக உள்ள விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், அச்சமங்கலம், உதயேந்திரம், மலையாம்பட்டு உள்ளிட்ட முக்கிய ஏரிகளில் பாதியளவுக்கூட தண்ணீர் இல்லை.

இதையும் படியுங்கள்:
அதிரடியாக கைது செய்யப்பட்ட Telegram CEO… 20 ஆண்டுகள் சிறை? 
Lakes

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்:

இதேபோல் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. சில ஏரிகளில் நீர்வரத்து ஏதும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், பருவமழை தொடங்க உள்ளதால், நீர்வரத்து ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மேலும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி மழைக்காலத்தில் அனைத்து ஏரிகளையும் முழுமையாக நிரப்பிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.               

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com