வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல்… எத்தனை பேர்? எங்கு தெரியுமா?

Deportation
Deportation
Published on

சட்டவிரோதமாக சுமார் 538 பேர் நாடு விட்டு நாடு கடத்தப்பட்டனர் என்ற செய்தி தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதுதான் வரலாற்றிலேயே மிகப்பெரிய நாடுகடத்தல் ஆகும். எங்கு என்று பார்ப்போமா?

அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கமலா ஹாரீஸுக்கும் ட்ரம்புக்கும் இடையே பெரிய போட்டி இருந்தது. இதில் டொனால்ட் டரம்ப் வெற்றிபெற்றார். இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் அதிபராக பொறுப்பேற்றார். பதவியேற்றவுடனே பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

இதில் ஒன்று, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால், அங்கு வாழும் 10 லட்ச இந்தியர்கள் பேரதிர்ச்சி ஆனார்கள்.

இதையும் படியுங்கள்:
mesmerizing meghalaya - மயக்கும் மேகாலயா!
Deportation

அதேபோல், மக்கள் சட்டவிரோதமாக குடியேறி வந்தார்கள். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக 538 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் ட்வீட் செய்திருக்கிறார். அதாவது, “சட்டவிரோதமாக குடியேறிய 538 குற்றவாளிகளை டிரம்ப் நிர்வாகம் கைது செய்தது. இதில் ஒருவர் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர், ட்ரென் டி அரகுவா கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோதக் குற்றவாளிகள் ஆகியோரும் அடங்குவர்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் செல்வ வளம் பெருக: பூஜை அறையில் இந்த இரண்டு சிலைகள் முக்கியம்! 
Deportation

டிரம்ப் நிர்வாகம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தி உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன.” என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்தில், “நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க டிரம்ப் நிர்வாகம் செய்து வரும் பணியின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே இது. மேலும் அவர்கள் செய்த குற்றங்களையும் சுங்க அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.” என்று பதிவிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com