வெயிலில் வாடிய கேமராமேனுக்கு விஜய் செய்த மனிதாபிமான செயல்..! வைரலாகும் விஜய்யின் மனிதாபிமான வீடியோ..!

TVK Vijay
TVK Vijay
Updated on

தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று பலரும் கருதுகின்றனர். இவர் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2 ஆண்டுகளைக் கடந்து, மூன்றாம் ஆண்டில் பயணித்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

விஜய் பிரச்சாரத்திற்காக செல்லும் போது, வெயிலில் வந்த கேமராமேன் ஒருவருக்கு அவரே கூல்ட்ரிங் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பெரம்பூரிலிருந்து தொடங்கிய விஜய், திருச்சி கிழக்கு, ஈரோடு மற்றும் புதுச்சேரி வரை மக்கள் முன்னிலையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் விஜய், பிரச்சாரத்திற்கு செல்லும் போதெல்லாம் தவெக தொண்டர்கள் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அவரது காரை பின்தொடர்ந்து வருகின்றனர். எதிர்பாராத விதமாக சில சமயங்களில் விபத்தும் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

தொண்டர்கள் யாரும் பிரச்சாரத்தின் போது காரை பின் தொடர்ந்து வர வேண்டாம் எனவும், மேலே ஏற வேண்டாம் எனவும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்படும் விபத்துக்கள் அவரை குற்ற வழக்குகளில் சிக்க வைத்து விடுகிறது.

குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதேபோல் கடந்த ஆண்டு மதுரை மாநாட்டில் விஜய் மீது ஒரு குற்ற வழக்கு உள்ளது. இருப்பினும் தவெக தலைவர் விஜய்யிடம் மனிதநேயப் பண்பு இருப்பதையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சார பயணத்தின் போது, வெயிலில் பணியாற்றிய கேமராமேன் ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து உதவிய நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்த மனிதநேயப் பண்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய்யின் காரை பின்தொடர்ந்து வந்த ரசிகர்களின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. அதனைப் பார்த்தவுடன் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, உடனை ஓடி வந்து, கீழே விழுந்த ரசிகர்களை எழுப்பி, அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று அன்புடன் நலம் விசாரித்தார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அவசர அவசரமாக கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.!
TVK Vijay

பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் காட்டிய இந்த அக்கறையும், மனித நேயமும் அந்தத் தருணத்தில் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இது போன்ற சில நிகழ்வுகள், தனது பயணத்தின் போது மக்களின் பாதுகாப்பிலும், தனது ரசிகர்களின் நலனிலும் விஜய் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மக்கள் தலைவர் ஒருவக்குத் தேவையான மனிதாபிமானத்தை விஜய் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். எளிமையான மற்றும் அக்கறையுள்ள இத்தகைய செயல்கள் விஜய்யின் ஆளுமையை மக்களிடம் மேலும் நெருக்கமாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 5 கிலோ சிலிண்டருக்கு இனி முகவரி சான்று தேவையில்லை.! மத்திய அரசு உத்தரவு.!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com