இங்கிலாந்தில் ஏலம் போன பழங்கால எலுமிச்சம்பழம்.. 1.48 லட்சமா? 

Lemon auctioned in England.
Lemon auctioned in England.

இங்கிலாந்து நாட்டில் பழங்கால எலுமிச்சம்பழம் ஒன்று ரூபாய் 1.48 லட்சத்திற்கு  ஏலம் விடப்பட்டுள்ளது. அப்படி அந்த எலுமிச்சம் பழம் என்ன ஸ்பெஷல்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இங்கிலாந்தில் ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டை விற்க முடிவு செய்தனர். அப்போது அவர்களின் இறந்த மாமாவின் அறையை சுத்தம் செய்து உடைமைகளை வரிசைப்படுத்தும் போது, அங்கிருந்த அலமாரியில் எலுமிச்சம் பழம் ஒன்று இருந்துள்ளது. அது பார்ப்பதற்கு சாதாரண எலுமிச்சம் பழம் போல் இல்லை. அதில் Given By Mr PLu Franchising Nov 4 1739 to Miss E Baxter என எழுதப்பட்டிருந்தது. எனவே இந்த எலுமிச்சம்பழம் சுமார் 285 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்பது தெரியவந்தது. 

மேலும் அந்த எலுமிச்சம் பழம் இருந்த அலமாரி 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதால், எலத்திற்கு விட்டால் நல்ல பணம் கிடைக்கும் என விற்பனைக்காக ஏலதாரர்களிடம் கொண்டு சென்றனர். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அலமாரிக்கு பதிலாக அந்த அலமாரியில் இருந்த 285 வயதான எலுமிச்சம் பழம் ரூபாய் 1.48 லட்சத்திற்கு ஏலம் போனது. 

இதுகுறித்து பேசிய ஏலலதாரர் பிரெட்டல், “எங்களுக்கு தொடக்கத்தில் இந்த எலுமிச்சம் பழம் இவ்வளவு விலைக்குப் போகும் என்பது தெரியாது. இதற்கு 40 முதல் 60 யூரோ கிடைக்கும் என நினைத்து விளையாட்டாக ஏலத்தைத் தொடங்கினோம். ஆனால் இந்த எலுமிச்சம் பழத்தை வாங்குவதற்கு அனைவரும் ஆர்வம் காட்டினர். ஒரு கட்டத்தில் 1100 யூரோவுக்கு மேல் ஏலம் சென்றது. இறுதியில் 1416 யூரோக்களுக்கு விற்பனையானது. அதிக விலைக்கு போகும் என நினைத்த அலமாரி வெறும் 32 யூரோவுக்கு மட்டுமே விற்பனையானது” என அவர் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்:
“நான் உயிருடன் தான் இருக்கிறேன்”.. Poonam Pandey-வின் அதிர்ச்சி வீடியோ! 
Lemon auctioned in England.

அந்த எலுமிச்சம் பழம் சுமார் 285 ஆண்டுகளுக்கு முன்னர், காலனித்துவ ஆட்சியில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு காதல் பரிசாக வந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு எலுமிச்சம்பழம் இவ்வளவு விலைக்கு ஏலம் போனது வியப்பை ஏற்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com