Lesley lokko architecture
Lesley lokko architecturestatic.labiennale.org

கட்டிடக்கலைக்கான ராயல் தங்கப்பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் எனும் சாதனைப்படைத்தார் லெஸ்லி லோக்கோ!

லகளவில் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான லெஸ்லி லோக்கோ முதல் முறையாக ராயல் தங்கப் பதக்கம் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற வரலாற்று சாதனைப்படைத்துள்ளார்.

ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் (ரிபா) Royal Institute of British Architects (Riba) மூலம் இந்த விருதுக்கு அவருக்கு வழங்கப்பட உள்ளது. இதனை மன்னர் சார்லஸ் அவருக்கு வழங்கவுள்ளார்.

லெஸ்லி லோக்கோ தனது கட்டிடக்கலை ஆப்பிரிக்கா மற்றும் உலகின் கிழக்கு பகுதி நாடுகளில் அதிகளவு மேற்கொண்டுள்ளதாக ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் தெரிவித்துள்ளது.

60 வயதான லெஸ்லி லோக்கோ கட்டிடக்கலை ஆசிரியராகவும், உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் கல்வியாளராகவும் தனது பணிக்காக அறியப்படுகிறார்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக கட்டிடக்கலைக்கு ஆப்பிரிக்க மற்றும் நிறவேற்றுமையால் பாதிக்கப்படும் மாணவர்களை கட்டிடக் கலையில் ஈடுபடுத்துவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

Lesley Lokko awarded architecture's Royal Gold Medal
Lesley Lokko awarded architecture's Royal Gold Medal

ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் விருது குறித்து பேசிய லெஸ்லி லோக்கோ "இந்த விருதை என் வாழ்நாளில் நான் பெறுவேன் என நினைத்துகூட பார்க்காத ஒன்று," என்று அவர் கூறினார். இந்த விஷயத்தை நான் முதலில் கூற நினைக்கும் நபர் என் தந்தைதான். ஆனால், அவர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், அவர் என்னை நினைத்து மகிழ்ச்சி கொள்வார் என நினைக்கிறேன்" என்றார்.

கானா நாட்டில் பிறந்த லெஸ்லி லோக்கோ, கட்டிட கலையில் மட்டுமல்லாமல் 13 புத்தகங்களை எழுதி உள்ளார். மேலும், 2021 ஆம் ஆண்டில், கானாவின் அக்ராவில் கல்வி ஆப்பிரிக்க ஃபியூச்சர்ஸ் நிறுவனத்தை நிறுவினார். அதில், கட்டிட கலையில் உள்ள இன மற்றும் நிறுவேறுபாடு குறித்து ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

லெஸ்லி லோக்கோ 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தபோது அவரின் வகுப்பில் கிட்டத்தட்ட 100 பேரில் இருவர் மட்டுமே கறுப்பு நிறத்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் வெறும் 6 பெண்கள் மட்டுமே அப்போது கட்டிட கலையில் இருந்துள்ளனர் என லோக்கோ நினைவு கூர்ந்தார்.

"என்னுடைய முதல் அபிப்ராயம் என்னவென்றால், ஓ, என்னைப் போன்றவர்கள் இங்கு அதிகம் இல்லை, அங்கு இருக்க எனக்கு உரிமை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான், வெறும் திட்டங்கள் மற்றும் ஒற்றுமையால் மட்டும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேலே கொண்டுவர முடியாது. அதன் பின்னனியில் சமூக மற்றும் பொருளாதார காரணங்கள் அடங்கியுள்ளது என்பது நான் புரிந்துக்கொண்டேன். இதன்காரணமாகதான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்கள் கட்டிடக்கலையில் கொண்டுவரவேண்டும் என் முன்னெடுப்பை எடுத்துவருகிறேன்” என்கிறார் லெஸ்லி லோக்கோ.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com