மீண்டும் லாக் டவுன்? மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கொரோனா!

கொரோனா
கொரோனா
Published on

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று கொரோனா வைரசால் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது கொரோனா. கடந்த மே மாதத்திற்குப் பிறகு தற்போது சீனாவில் கொரோனா பலி பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் கொரோனாவில் உயிர் பலி ஏற்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

covid 19
covid 19

கொரோனா பெருந்தொற்றால் பொருளதார ரீதியாக பெரிய பின்னடைவை சந்தித்தது பலவேறு உலக நாடுகள். இப்போது தான் மெல்ல இந்த சரிவில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது உலகத்தையே பீதியடைய செய்கிறது.

கொரோனா பரவலை தொடர்ந்து சீனாவில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை;

குவாங்சோ மாகாணத்தில் உள்ள பையூன் மாவட்டத்தில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், நோய் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக சுகாதரத்துறையை அணுக வேண்டும் எனவும் பையூன் நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வெளியில் இருந்து நகருக்குள் வருபவர்கள் மூன்று நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com