#BIG NEWS : 850-ஆக உயரும் மக்களவை தொகுதிகள்; 280 இடங்கள் பெண்களுக்கு - மத்திய அரசின் மெகா பிளான்!

Lok sabha
Lok sabha
Updated on

மக்களவையில் மகளிர்க்கு 280 தொகுதிகள் ஒதுக்கப்படும் மசோதா விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது குறித்த தகவல்களை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும்

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவின் நகல் மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

வரும் 16ஆம் தேதி மக்களவையில் விவாதத்திற்கு வரும் மூன்று முக்கியமான மசோதாக்களில் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பெண்கள் 33% இட ஒதுக்கீடு மசோதாவை 2029 தேர்தலிலேயே அமலுக்கு கொண்டு வர அரசு முயற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

131வது புதிய அரசியலமைப்பு திருத்த மசோதா மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வேகமாக அமல்படுத்த முடியும் என கருதப்படுகிறது. மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆகவும் அதில் தொகுதி வரையறை மூலம் சுமார் 280 தொகுதிகள் மகளிருக்கானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தொகுதி வரையறை மூலம் மாநிலங்களில் 215 மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 தொகுதிகள் வரையறுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மக்களவையில் தற்போது 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில் அது 850 ஆக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2029 மக்களவைத் தேர்தலில் தொகுதி மறு வரையும் மகளிர் ஒதுக்கீடும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி “இதை தாமதப்படுத்துவது பெண்களுக்கு அநீதி” என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா “இது காலத்தின் தேவையான வரலாற்று முடிவு” என்றும் கருத்து கூறியுள்ளனர்.

தொகுதி வரையறை முறையை வைத்து அமல்படுத்த தாமதப்படுத்தலாம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில் வரும் 16ந்தேதி இந்த மசோதா பற்றிய தகவல்கள் மேலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : நெசவாளர் குடும்பங்களுக்கு வருடம் ரூபாய் 30,000 வழங்கப்படும் - விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!
Lok sabha
logo
Kalki Online
kalkionline.com