Loksabha Election
Loksabha Election

Loksabha Election 2024: இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவு!

இன்று இந்தியா முழுவதும் 7ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் மோடி களமிறங்கும் வாரணாசி தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாட்டின் பல இடங்களில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். முதற்கட்ட வாக்குப்பதிவில், 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

இதனைத்தொடர்ந்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதனையடுத்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 93 தொகுதிகளிலும் நடைபெற்றது.

அந்தவகையில், 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும், தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து 49 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதேபோல் கடந்த மே மாதம் 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆறு மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து 7ம் கட்ட தேர்தல், எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பீகாரில் நாளந்தா, பாட்னா சாஹிப், பாடலிபுத்ரா, அர்ரா, பக்சர், சசாரம், கரகட், ஜஹானாபாத் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா, மண்டி, ஹமிர்பூர், சிம்லா ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்கண்டில் ராஜ்மஹால், தும்கா, கோடா ஆகிய தொகுதிகளிலும், ஒடிசாவில் மயூர்பஞ்ச், பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
மரண தண்டனை பட்டியலில் ஈரான் முதலிடம்… ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த சவுதி!
Loksabha Election

பஞ்சாப்பில் குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், கதூர் சாஹிப், ஜலந்தர், ஹோஷியார்பூர், ஆனந்த்பூர் சாஹிப், லூதியானா, ஃபதேகர் சாஹிப், ஃபரித்கோட், ஃபிரோஸ்பூர், பதிண்டா, சங்ரூர், பாட்டியாலா ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் மஹராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷி நகர், தியோரியா, பான்ஸ்கான், கோசி, சேலம்பூர், பல்லியா, காஜிபூர், சண்டௌலி, வாரணாசி, மிர்சாபூர், ராபர்ட்ஸ்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்காளத்தில் டம் டம், பராசத், பாசிர்ஹாட், ஜெய்நகர், மதுராபூர், டயமண்ட் ஹார்பர், ஜாதவ்பூர், கொல்கத்தா தக்ஷின், கொல்கத்தா, உத்தரா ஆகிய தொகுதிகளிலும் சண்டிகர் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

logo
Kalki Online
kalkionline.com