பிரதமர் மோடியின் ஆட்சியில் ‘ராம ராஜ்ஜியம்’ எதிரொலிக்கிறது: திரெளபதி முர்மு!

பிரதமர் மோடியின் ஆட்சியில் ‘ராம ராஜ்ஜியம்’ எதிரொலிக்கிறது: திரெளபதி முர்மு!

யோத்திரியில் ராமர் ஆலயத்தில் இன்று ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் நன்னாளில் பிரதமர் மோடிக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடியின் நிர்வாகத்தை பாராட்டியுள்ள குடியரசுத் தலைவர், “பிரதமர் மோடியின் ஆட்சியில் ராமராஜ்ஜியம் எதிரொலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராமர் மக்களாட்சியை நடத்தினார். அதேபோல மோடியும் மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார் என்றும் திரெளபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 11 நாள் கடுமையான அனுஷ்டானம் மேற்கொண்டது ஒரு புனிதச் சடங்கு மட்டுமல்ல, அது பிரபு ஸ்ரீராமனுக்கான ஆன்மிக சமர்ப்பணம் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

 திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு திரெளபதி முர்மு எழுதிய கடித்ததில் மேலும் கூறியுள்ளதாவது: ராமர் பிறந்த இடத்தில் கோவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று ராமச்சந்திர மூர்த்திக்கு பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடக்கிறது. அதையொட்டி நீங்கள் 11 நாள் மேற்கொண்ட அனுஷ்டானம் புனிதமானது மட்டுமல்ல, அது பிரபு ராமனுக்கு சமர்ப்பணம் செய்யும் ஆன்மிக நிகழ்வாகும். இந்த நன்னாளில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அயோத்தியில் ராமர் ஆலயத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை நாட்டில் உள்ள மக்கள் மிகழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். நமது தேசத்தின் மறுமலர்ச்சியில் ஒரு புதிய சுழற்சியின் தொடக்கமாகும். இந்த விழாவைக்காணும் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்று முர்மு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரபு ஸ்ரீராமனின் பண்புகளை வெளிப்படுத்தும் துணிச்சல், கருணை, இரக்கம் மற்றும் கடமையின் கவனம் செலுத்துதல் போன்றவை இந்த அற்புதமான கோயில் மூலம் மக்களுக்கு நெருக்கமாக கொண்டுசெல்லப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

நமது ஆன்மிக, கலாசார மற்றும் பாரம்பரியத்தின் அம்சமாக இருக்கிறார் பிரபு ஸ்ரீராம். எல்லாவற்றையும்விட தீமையை அழித்து நல்லனவற்றை அவர் பிரதிபலிக்கிறார்.

பகவான் ஸ்ரீராமரின் வாழ்க்கை மற்றும் அவரது கொள்கைகள் நாட்டின் வரலாற்றில் பலரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி, தனது கடைசி மூச்சு வரை ராமநாமத்தை வலிமையாக கொண்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு ஜப்பானின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா? 
பிரதமர் மோடியின் ஆட்சியில் ‘ராம ராஜ்ஜியம்’ எதிரொலிக்கிறது: திரெளபதி முர்மு!

பகவான் ராமர், தனது ஆட்சியில் நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்து மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார். அதே நிலை இப்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியிலும் பிரதிபலிக்கிறது என்று அந்த கடிதத்தில் திரெளபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com