#BREAKING ஐபிஎல் 2026: சூப்பர் ஓவர் வரை சென்று திரில் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா..!

லக்னோவில் இன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
Kolkata Knight Riders
Kolkata Knight Ridersimage credit - outlookindia.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் 2 போட்டிகள் நடக்கின்றது. இன்று லக்னோவில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லையுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியதில் 5-ல் லக்னோவும், 2-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் இரண்டு அணிகளுக்கும் இது ஒரு முக்கியமான ஆட்டமாகும், ஏனெனில் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைக்க இந்த வெற்றி இரு அணிகளுக்கும் அவசியம் என்பதால் இன்றைய போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 155 ரன்களை எடுத்து டையில் முடிந்தது.

எந்த அணிக்கு வெற்றி என்பதை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் போடப்பட்டது. சூப்பர் ஓவரில் 2 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டதில் லக்னோ அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 4 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

logo
Kalki Online
kalkionline.com