திருப்பதி போற பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க...இந்த நாளில் திருப்பதி கோவில் மூடப்படும்...ஏன் தெரியுமா?

இந்த நாளில் திருப்பதி கோவில் நடை மூடப்படும் என்பதால் திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் உங்கள் பயண திட்டத்தை அதற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்
Published on

இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் அமைந்துள்ள திருப்பதி கோவில் இந்தியாவில் பணக்கார கோவிலாக கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து, வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வழிபாடு செய்கின்றனர். சாதாரண நாட்களில் 65,000 முதல் 80,000 வரையிலும், வார இறுதி நாட்களில் 1.2 லட்சம் மற்றும் அதற்கு மேலும் பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதுவே விடுமுறை நாட்கள் மற்றும் பிரம்மோற்சவ கருட சேவை நாளில் திருப்பதி கோவிலுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நாள்தோறும் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் தொடர்ந்து செய்து வருகிறது. திருப்பதி கோவில் நடை அதிகாலை 1:30 மணி முதல் இரவு 12:00 மணி வரை திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
சந்திர கிரகணத்தன்று திருப்பதி கோயில் தரிசனம் ரத்து!
திருப்பதி கோவில்

இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்)சந்திர கிரகணம் வருவதால் வரும் 7-ம்தேதி திருப்பதி கோவில் நடை அடைக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பொதுவாக ஜோதிட ரீதியாக கிரகணத்தன்று இருட்டாகும் என்பதால் கோவில்களை அடைப்பது வழக்கம். இந்தியாவில் சில கோவில்கள் திறந்திருந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணிக்கு ஆரம்பித்து, 8-ம்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது.

திருப்பதி கோவிலில் எப்பொழுதும் கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள்(8-ம்தேதி) அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பின்னர் 8-ந்தேதி வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும் என்றும் பின்னர் புண்யாஹாவசனம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கமாக நடக்கும் தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம், அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமாக நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 8-ம்தேதி காலை 6 மணி முதல் பக்தர்கள் திருப்பதை ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு செம்டம்பர் மாதம் 7-ம்தேதி திருப்பதி கோவிலில் நடைபெற வேண்டிய ஊஞ்ச சேவை, கட்டணம் பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளை ரத்து செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதேபோல் திருப்பதியில் உள்ள அன்னதான கூடம் செப்டம்பர் 7-ம் தேதி மாலை 3 மணி முதல் செயல்படாது என்றும் அடுத்த நாள் 8-ம்தேதி காலை எட்டரை மணி முதல் பக்தர்களுக்கு மீண்டும் இலவசம் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஆகஸ்ட் 15-ம்தேதி முதல் இது கட்டாயம்..!
திருப்பதி கோவில்

திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட செல்லும் பக்தர்கள் மேற்கண்ட தகவலை கருத்தில் கொண்டு அதற்கேற்றபடி உங்களுடைய பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு திருமலை- திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com