சென்னையில் வேகமாக பரவி வரும் 'மெட்ராஸ் ஐ'!

Madras Eye
Madras Eye

சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதை அடுத்து தினமும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 10 கண் நோயாளிகள் வருகின்றனர். மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஜ் ஐ தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த மெட்ராஸ் ஐ .

இந்த மெட்ராஸ் பாதிப்பால் கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறி இமைப்பகுதியில் ஒட்டிக் கொள்ளுதல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் எனலாம்.

Madras Eye
Madras Eye

மெட்ராஸ் ஐ தொற்றின் பொதுவான அறிகுறிகள்

  • கான்ஜுன்க்டிவிடிஸ் அரிப்பு உணர்வு.

  • கண்கள் சிவத்தல்.

  • கடுமையான எரிச்சலுடன் கண் சிவத்தல்.

  • கண்ணின் வெள்ளைப் பகுதி, சிவப்பாக மாறுதல்

  • வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசுதல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேற்றம்.

  • கார்னியா பாதிப்பால் மங்கலான பார்வையும் ஏற்படலாம்.

  • சில நோயாளிகளுக்கு கண் வீக்கம் ஏற்படும்.

    செய்யக்கூடாதவை:

  • கண்களைத் தொடுவதால் இந்த வைரஸ் தொற்று பரவும் நிலையில், நோய்த்தொற்று ஏற்படும் போது கண்ணைத் தேய்ப்பதையோ அல்லது தொடுவதையோ தவிர்க்க வேண்டும்.

  • அதிகப்படியான திரவம் கண்களில் இருந்து வெளியேற்றப்பட்டால், கண்ணை சுத்தம் செய்ய டிஸ்யூக்கள் பயன்படுத்துங்கள்.

  • ஆனால் மருத்துவர்கள் பரிந்துரையின்றி கடையில் கிடைக்கும் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

    மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது. மெட்ராஸ் ஐ 5 நாட்களில் குணமடைய கூடியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com