

சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோருக்கான விடுதிகள் (Hostels) வணிகக் கட்டிடங்கள் அல்ல என்று கூறியுள்ளது. .எனவே, அவைகள் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்தக் தேவையில்லை. இதன் காரணமாக விடுதிகள் மீது விதிக்கப்படும் சொத்து வரிகள் இரத்தாகும் என தெரிகிறது.
மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள்தான் ஆகியோர்தான் விடுதிகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சென்னை, கோவை மாநகராட்சிகளின் சார்பில் இவ்வாறான விடுதிகளுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி விதிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, விடுதி உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமணர்த்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்த போது. வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை விதித்தால், அதை, ஹாஸ்டலில் தங்குவோர்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா நந்தகுமார் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் நிலையில் இல்லாதவர்கள் தான் ஹாஸ்டல்களில் தங்குகின்றனர். அதனால், ஹாஸ்டல்கள், குடியிருப்பு கட்டிடங்கள் தான்.அவற்றை, வணிக கட்டிடங்களாக கருத முடியாது எனக் கூறி, வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை செலுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஹாஸ்டல்களுக்கு குடியிருப்புக் கட்டிடங்களுக்கான வரியை மட்டுமே வசூலிக்க வேண்டும்.. சொத்து வரி வசூலிக்கப்படக் கூடாது என்று கூறி சென்னை மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்தார்.
இது விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையேயும், வேலைக்குச் செல்லும் பொதுமக்களிடையேயும் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.