

இந்தியாவில் 7,000-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன. நாட்டில் தினமும் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ரெயில்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் தேவைக்காவும், ரெயில் நிலையங்களில் உணவு, தண்ணீர், புத்தகங்கள், செய்தித்தாள்கள், பொம்மைகள் மற்றும் பாரம்பரியப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான கடைகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ரெயில்வே பிளாட்பாரத்தில் அமைந்துள்ள டீ-ஸ்நாக்ஸ் கடைகளுக்கு அதிக அளவில் பயணிகள் வருவதால், இங்கு கடைகள் அமைப்பவர்கள் பெரும் வருவாய் ஈட்டுகின்றனர்.
மேலும் ரெயில் நிலையத்தில் சில கடைகளை அமைக்க, இந்திய ரெயில்வேயின் (IRCTC) சம்பந்தப்பட்ட பிரிவிடமிருந்து உரிமம் அல்லது அனுமதி பெற வேண்டும். உணவுக் கடைகளை திறக்க, விண்ணப்பம் மற்றும் தேவையான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
அதேநேரம், சில நேரங்களில், ரெயில்வே வாரியம் நேரடியாக கடைகளை அமைப்பதற்கான நிதியை ஒதுக்குகிறது. இதன்மூலம் இந்திய ரெயில்வே நேரடியாக நாட்டில் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இது தவிர, மறைமுகமாக பலருக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
அப்படி ரெயில் நிலையங்களில் பயணிகளின் அத்தியாவசிய தேவைக்காக பல கடைகள் இருந்தாலும் மெடிக்கல் ஷாப் இருக்காது என்பதை யாராவது கவனித்து இருக்கீங்க. தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகும் இங்கு எதனால் மெடிக்கல் ஷாப் இல்லை என்பதை எப்போதாவது யோசித்து இருக்கீங்களா. வாங்க ரெயில் நிலையங்களில் மெடிக்கல் ஷாப் இல்லை என்பதற்கான மூன்று காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
1. ஒரு மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளது. அதேசமயம் மெடிக்கல் ஷாப் வைக்க அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது கட்டாயம். உதாரணமாக சில முக்கியமான மருந்துகளை பாதுகாப்பாக எடுத்து கொண்டு வந்து சரியான வெப்ப நிலையில் அதை பாதுகாப்பாக வைக்கும் வரைக்கும் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
ஒரு பிஸியான ரெயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து போய் கொண்டிருப்பார்கள். மருந்தை வெளியில் இருக்கும் கடைக்கும் எடுத்துச்சொல்வதை விட ரெயில் நிலையத்தின் உள்ளே இருக்கும் கடைக்கு கொண்டு செல்வது மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
2. மெடிக்கல் ஷாப் வைக்கும் போது அதில் இருந்து லாபம் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் ரெயில் நிலையத்தை பொறுத்தவரை ஒரு ஓட்டலில் நடக்கும் வியாபாரம் அளவுக்கோ அல்லது மற்ற கடைகளில் நடக்கும் வியாபாரம் அளவுக்கோ மெடிக்கல் ஷாப்பில் வியாபாரம் நடக்காது.
மிகவும் குறைவாகவே நடக்கும். அதேபோல் லாபமும் குறைவாகவே வரும். அதுமட்டுமில்லாமல் மெடிக்கல் ஷாப்பில் பிபார்மோ, டிபார்மோ படித்த தகுதியான பார்மசிஸ்ட்டதான் வேலைக்கு வைக்க முடியும். அதுவும் 24 மணிநேரமும் இயங்கும் மெடிக்கல் ஷாப்புக்கு மூன்று ஷிப்டுக்கு மூன்று பேரை வேலைக்கு வைத்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுக்க வேண்டும். இதற்கு அதிக மூதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதேநேரம் ரெயில் நிலையங்களில் வைக்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு மிகவும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இவ்வளவு செலவு செய்து, முதலீடு போட்டு லாபம் பெரிசா எடுக்க முடியாது. இதெல்லாம் கட்டுப்படியாகாது என்று நினைத்தே நிறைய பேர் ரெயில் நிலையங்களில் மெடிக்கல் ஷாப் வைக்க முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது.
3. ரெயில்வே ஸ்டேஷன்லா அறக்க பறக்க ரெயிலை பிடிக்க ஓடிவரும் மக்கள் மருந்துவர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டை எடுத்து வந்து மருந்து வாங்கிட்டு இருப்பாங்னு எல்லாம் சொல்ல முடியாது.
அதேபோல கடைக்காரரும் அதே அவசரத்துடன் மருந்து சீட்டை வாங்கி பார்த்து செக் பண்ணி அந்த மருந்தை கொடுக்கும் போது அவசரத்தில் தவறுகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அப்படின்னா மக்கள் எமர்ஜென்சிக்கு என்னதான் பண்ணுவாங்க அப்படின்னு கேட்டா, அதுக்கு ரெயில்வே மெடிக்கல் எமர்ஜென்சி தேவைப்படுற மக்களுக்கு முதலுதவி மையம் (first Aid) போன்ற விஷயங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க. ஆனா என்னதான் இந்தமாதிரி இந்த மாதிரி முதலுதவி மையம் ஏற்படுத்தி கொடுத்தாலும் மெடிக்கல் ஷாப் இல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி படுறாங்க. அவசரத்துக்கு ஒரு மருந்து வாங்குவதற்கு கூட ரெயில் நிலையத்தை விட்டு வெளியில் போக வேண்டியிருக்கு.
3. ரெயில்வே ஸ்டேஷனுக்கு அறக்க பறக்க ரெயிலை பிடிக்க ஓடிவரும் மக்கள் மருந்துவர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டை எடுத்து வந்து பொறுமையாக மருந்து வாங்கிக்கொண்டு இருப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதேபோல கடைக்காரரும் அதே அவசரத்துடன் மருந்து சீட்டை வாங்கி பார்த்து செக் பண்ணி அந்த மருந்தை கொடுக்கும் போது அவசரத்தில் தவறுகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அப்படின்னா மக்கள் எமர்ஜென்சிக்கு என்னதான் பண்ணுவாங்க அப்படின்னு கேட்டா, அதுக்கு ரெயில்வே, மெடிக்கல் எமர்ஜென்சி தேவைப்படுற மக்களுக்கு முதலுதவி மையம் (first Aid) போன்ற விஷயங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க.
ஆனா என்னதான் இந்தமாதிரி முதலுதவி மையம் ஏற்படுத்தி கொடுத்தாலும் மெடிக்கல் ஷாப் இல்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அவசரத்துக்கு ஒரு மருந்து வாங்குவதற்கு கூட ரெயில் நிலையத்தை விட்டு வெளியில் போக வேண்டியிருக்கு.
இது பொதுமக்களுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்துவதாக பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்ததால் இப்போ அரசு என்ன பண்ணியிருக்காங்க அப்படின்னா முன்னாடி சொன்ன குறைகள் எல்லாம் ஓவர்கம் பண்ணி ‘பிரதம மந்திரி பாரதிய ஜென் ஷதி’ என்ற ஒரு திட்டத்தின் கீழ் மலிவு விலையில் மருந்து கடைகளை படிப்படியாக எல்லா ரெயில் நிலையங்களிலும் கொண்டு வர போறதா அறிவித்து இருக்காங்க. அதனால் கூடிய சீக்கிரமே நம்ம எல்லா ரெயில்வே நிலையங்களிலும் மெடிக்கல் ஷாப்பை பார்க்கலாம்.