சுதந்திர தினத்தில் புதிய நடைமுறை: கொடியேற்றும் முன் இது கட்டாயம்..!!

தேசியக் கொடியேற்றத்திற்கு முன் 'வந்தே மாதரம்' கட்டாயம்!: சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறையின் அதிரடி அறிவிப்பு!
Independence Day
Independence Day
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் பொழுது முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்டது. 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படும் நேரத்தில் கோட்டையில் முதல் முறையாக கொடியேற்றுகிறார் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்.

தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடலை முதலில் பாட வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் மற்றும் புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாக்களின் பொழுது தேசியக் கொடியேற்று நிகழ்வுக்கு முன்னுரிமை அளித்து இப்பாடல் பாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினம் மற்றும் இதர முக்கிய தேசிய விழாக்களின் போது தேசியக் கொடி உயர்த்தப்படுவதற்கு முன்பு 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவுத்துறை மற்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையிலும், நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைவு கூரும் வகையிலும் இந்த சிறப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஜன கண மன (தேசிய கீதம்) நமது தேசிய கீதமாகப் போற்றப்பட்டாலும், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'வந்தே மாதரம்' தேசியப் பாடலுக்கும் அதற்கு இணையான முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்படுகிறது. சுதந்திர தின விழாக்களின் பொழுது அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் இந்த வரிசைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Happy Independence Day!
Independence Day

இந்தியாவில் சுதந்திர தின விழாக்களில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற புதிய நடைமுறை மற்றும் அறிவுறுத்தல்கள் தற்போதைய 2026 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களில் முக்கிய விவாதமாகவும் நடைமுறையாகவும் மாறி உள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் 80 ஆவது சுதந்திர தின அதிகாரப்பூர்வ விழாவில், பிரதமர் மேடைக்கு வந்தவுடன் தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்படும். அதன் பின்னர் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பிரதமரின் உரைக்குப் பிறகு தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் சுதந்திர தின விழாவின் பொழுது தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தி உள்ளது. கொடியேற்றிய பின்பு வழக்கம்போல் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்களால் உருவாக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்த முக்கிய மாற்றங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தின்படி, தேசிய கீதத்திற்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்தும், பாதுகாப்பும் தற்பொழுது வந்தே மாதரம் தேசிய பாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! 10,000 வேலைவாய்ப்புகள்! சென்னையில் மாபெரும் ‘Mega Job Fair’..!!
Independence Day
logo
Kalki Online
kalkionline.com