

சென்னையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த நற்செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் 10,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் வகையில், சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு புதுப்புத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22-ம்தேதி நடைபெற உள்ளது.
மொத்தம் 10,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இந்த ஒரே முகாம் மூலம் நிரப்பப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. விவேலை தேடுவோர் தங்களின் கல்விச் சான்றிதழ்களுடன் இதில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதிகள் :
இம்முகாமில் குறைந்தபட்ச கல்வித்தறிவிலிருந்து உயர் கல்வி வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம்.
* 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 (+2) தேர்ச்சி பெற்றவர்கள்
* கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் (Graduates),
* டிப்ளமோ (Diploma) படித்தவர்கள்
* ஐ.டி.ஐ (ITI) மற்றும் தொழிற்கல்வி முடித்தவர்கள்
* பொறியியல் பட்டதாரிகள் (B.E / B.Tech)
* கணினி இயக்குபவர்கள் (Computer Operators) மற்றும் தையல் கலை கற்றவர்கள்
மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
மேலும் இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
தேவையான ஆவணங்கள்
பயோடேட்டா (Resume)
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
கல்விச் சான்றிதழ்கள் (10th, 12th, டிப்ளமோ, டிகிரி போன்றவை) நகல்கள்.
ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு அடையாள அட்டை.
விண்ணப்பிப்பது எப்படி.?
அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Employment Office) பதிவு செய்து காத்திருப்பவர்கள் தனியார் வேலைக்குச் சென்றால் தங்களின் பதிவு மூப்பு (Seniority) ரத்தாகிவிடுமோ என்ற பயம் பலருக்கு உண்டு.
ஆனால், இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் ஆகும். தகுதியுடைய சென்னை இளைஞர்கள் கீழே உள்ள இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
1. சென்னை கிண்டியில் (சென்னை-32) அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று தங்களது விவரங்களைப் பதிவு செய்யாலாம்.
2. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள https://forms.gle/W4Kvwo9LeMZg4sKS7 என்ற அதிகாரப்பூர்வ கூகுள் படிவ இணைய லிங்க் மூலமாக இளைஞர்கள் தங்களின் மொபைல் போன் அல்லது கணினி வழியாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மிக எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்தத் தகவலை உடனே பகிர்ந்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளச் செய்யுங்கள்!