நவீன குடும்ப அமைப்பைக் காப்பாற்ற புதிய யோசனையை முன்வைத்த மதுரை உயர் நீதிமன்றம்..!!

நவீன குடும்ப அமைப்பைக் காப்பாற்ற புதிய யோசனையை முன்வைத்த மதுரை உயர் நீதிமன்றம்.
GR.Swaminathan Sumathi
Madurai High court Live law , Sekar reporter
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

சமீப காலமாக திருமணம் செய்து கொள்ளாத ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் பனிச்சுமையும் , பொருளாதார சுதந்திரமும் இருக்கிறது. நேற்று உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தீர்ப்பின் போது நீதிபதிகள் இது குறித்து வேதனையை தெரிவித்தனர்.

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் தொடர்ந்த விவாகரத்து வழக்கில், நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு தற்போது அனைத்து ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் சமூகத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமாக சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் நிலை தற்போது மிகவும் அரிதாகிவிட்டது. இருவரும் சம்பாதிக்கும் நிலையில் இருப்பதால், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெரும்பாலும் குறைந்துவிட்டது. இதனால் திருமண உறவுகளில் ஈகோ அதிகரித்து விவாகரத்துகள் சர்வ சாதாரணமாக மாறிவிட்டன. இது போன்ற நடைமுறைகளை மாற்ற குடும்ப அமைப்பை மீட்கவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதியினர் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தனர். மருத்துவர்களான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் கணவர் மருத்துவம் சார்ந்த உயர்கல்வி படிக்க விரும்பியதால், மனைவி தனது பெற்றோர்களுடன் தங்கி மருத்துவப் பணியாற்றி கொண்டு, குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்த தம்பதிகள் , பெண்ணின் அப்பா வீட்டில் தங்கியிருந்துள்ளனர். பெண் வீட்டிலிருந்து தனியாக குடியேற வேண்டும் என்று கணவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். மனைவியோ அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதன் பின்னர் கணவர் விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். மனைவி தன் கணவருடன் இணைந்து வாழ உரிமை கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

House Husband
House Husband Ask writes

நேற்று இந்த வழக்கினை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு கூறியதாவது , "பெண்களின் வேலை வாய்ப்புகளுக்குத் திருமணம் தடையாக உணர்வதால், அதனால் திருமணத்தை அவர்கள் தவிர்க்க விரும்புகின்றனர். இதனால் திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இது பல திருமண உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் கணவர்கள் வீட்டுப் பொறுப்புகளை ஏற்கும் வீட்டு நிர்வாகிகளாக (House husband) மாறினால் இச்சூழ்நிலையைச் சரிசெய்ய முடியும். பல வீடுகளில் நிர்வாகியாகப் பெண்கள் (housewives) இருக்கும்போது, ​​ஆண்களும் அத்தகைய பொறுப்பை ஏற்கலாம். இதன் மூலம் திருமணம் மற்றும் குடும்பம் ஆகிய அமைப்பைப் பாதுகாக்க உதவும் என்று நாங்கள் கருதுகிறோம்.

 இந்த வழக்கில் கணவர் தனது உயர்கல்வி மூலம் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் போது , மனைவி குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இதில் அவரது தியாகத்தை அங்கீகரிக்க வேண்டும் , என்று நீதிபதிகள் கூறினர். அதன் பின்னர் பரஸ்பரம் இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. மனைவிக்கு இழப்பீடாக ₹2.5 கோடி வழங்க கணவரும் சம்மதித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com