

உலகப் புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் நாளை 17ம் தேதியன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நாளை (செப்டம்பர் 17, வியாழக்கிழமை) மிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது குடமுழுக்கு நடைபெறுகிறது. 2018-ல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சிற்பக் கூடங்கள் மூலம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது.
பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை அதிகாலை 3.35 மணிக்கு 12-ஆம் கால யாக பூஜை தொடங்குகிறது. காலை 5.45 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு, யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் அணிவகுக்க பிரகாரங்களைச் சுற்றி வரப்படும். தொடர்ந்து, காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் கோயில் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்குப் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு:
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 17.09.2026 அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 26.09.2026 (சனிக்கிழமை) பணிநாளாகச் செயல்படும்.
சிறப்பு ரயில்கள் மற்றும் 285 பேருந்துகள்:
பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
சிறப்பு ரயில்: தாம்பரம் - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் (06159) இன்று (செப்.16) மாலை 5.00 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரையை அடையும். மறுமார்க்கமாகச் சிறப்பு ரயில் (06160) செப்.17 பிற்பகல் 2.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும். இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல் வழியாக ரயில் இயக்கப்படும்.
இதேபோல் நெல்லையில் இருந்து செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும். சிறப்பு ரயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.
இன்று (செப்டம்பர் 16) மாலை 4.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் (06780), இரவு 7.45 மணிக்கு மதுரை வந்தடையும்; பின்னர், 7.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பழனி சென்றடையும்.செப்டம்பர் 17ஆம் தேதி மதியம் 2.20 மணிக்கு பழனியில் இருந்து புறப்படும் ரயில் (06779), மாலை 4.25 மணிக்கு மதுரை வந்தடையும். பின்னர், 4.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, இரவு 8.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை சந்திப்பு, சோழவந்தான், திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம் வழியாக ரயில் இயக்கப்படும்.
06153/06154 - சென்னை சென்ட்ரல் → மதுரை
செப். 16 மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, செப். 17 அதிகாலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து செப். 17 பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும்.
06157/06158 - தாம்பரம் - மதுரை
செப். 16 இரவு 9.40 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, செப். 17 அதிகாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து செப். 17 இரவு 7 மணிக்கு புறப்படும்.
06161/06162 - சென்னை எழும்பூர் → மானாமதுரை (மெழு)
செப். 16 காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் செப். 17 நண்பகல் 12 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும்.
சிறப்புப் பேருந்துகள்: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மதுரைக்கு 50 சிறப்புப் பேருந்துகளும், கோவை, திருப்பூர், நெல்லை உள்ளிட்ட பிற நகரங்களிலிருந்து 235 பேருந்துகளும் என மொத்தம் 285 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர மதுரை நகரப் பகுதிகளிலிருந்தும் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து மதுரைக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கையில் பேருந்துகள் பொதுமக்களின் பயணத் தேவைக்கேற்ப இயக்கப்படும்.
கோயம்புத்தூர் – 30 பேருந்துகள்
திருப்பூர் – 30 பேருந்துகள்
ராமநாதபுரம் – 30 பேருந்துகள்
அருப்புக்கோட்டை – 25 பேருந்துகள்
சிவகாசி – 30 பேருந்துகள்
ராஜபாளையம் – 30 பேருந்துகள்
விருதுநகர் – 10 பேருந்துகள்
தேனி – 30 பேருந்துகள்
திண்டுக்கல் – 20 பேருந்துகள்
மேலும், மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம், மேலூர், திருப்புவனம், வாடிப்பட்டி, நத்தம், பூவந்தி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும்.
அறங்காவலர் குழுவின் புகார் மற்றும் அரசியல் சர்ச்சை:
அதேவேளையில், கும்பாபிஷேகத்திற்கான அனுமதி அட்டைகள் (Passes), உள்கட்டமைப்பு மற்றும் உபயதாரர்கள் அழைப்பில் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1963-ல் மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம் அளித்த குடும்பத்தைச் சேர்ந்த கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் பேசுகையில், "அரசியல் தலையீட்டுடன் பணிகள் நடைபெறுகின்றன; முக்கிய உபயதாரர்கள் மற்றும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் சரியாக வெளியிடவில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறங்காவலர் குழுவின் புகார் மற்றும் அரசியல் சர்ச்சை:
அதேவேளையில், கும்பாபிஷேகத்திற்கான அனுமதி அட்டைகள் (Passes), உள்கட்டமைப்பு மற்றும் உபயதாரர்கள் அழைப்பில் கோயில் நிர்வாகம் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1963-ல் மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம் அளித்த குடும்பத்தைச் சேர்ந்த கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் பேசுகையில், "அரசியல் தலையீட்டுடன் பணிகள் நடைபெறுகின்றன; முக்கிய உபயதாரர்கள் மற்றும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் சரியாக வெளியிடவில்லை" என குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழிகாட்டு நெறமுறைகள்:
* மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது 4 ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
* அனுமதி அட்டை இல்லாத பக்தர்களுக்கு காலை 10 மணி வரை சித்திரை வீதிகளில் நிற்க அனுமதி இல்லை.
* கட்டிடங்கள் மற்றும் மேற்கூரைகளின் மீது பொதுமக்கள் ஏறக் கூடாது.
* விதிமீறல் ஏற்பட்டால் கட்டிட உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 10 மணிக்கு பிறகு, மேற்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் வழியாக பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
* தரிசனம் முடிந்த பிறகு கிழக்கு ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்லலாம்.
தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்:
மதுரையில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பழங்காநத்தம் ரவுண்டானா, எல்லிஸ் நகர், வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல், கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் தெப்பக்குளம் 16 கால் மண்டபம் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு ஏற்பாடுகள்:
* மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக விழாவில் 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரசாத பையில் மஞ்சள், குங்குமம், விபூதி, தண்ணீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை இருக்கும்.
* கோயிலுக்கு செல்லும் வழித்தடங்களை எளிதாக அறிந்து கொள்ள QR கோடுடன் கூடிய அறிவிப்பு பலகைகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆபத்தான கட்டிடங்களை இடிக்க உத்தரவு:
மதுரையில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றி ஆபத்தான நிலையில் இருக்கும் 36 கட்டிடங்களை ஏழு நாட்களில் இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 265 கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்தும், கும்பாபிஷேகத்தின் போது பொதுமக்களை கட்டிடங்கள் மீது ஏற அனுமதிக்கக் கூடாது எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.