மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!

மூன்று நிலைகளில் பெருமாள் காட்சியளிக்கும் அஷ்டாங்க விமானத்தின் வியக்க வைக்கும் பொக்கிஷங்கள் மற்றும் அற்புதங்கள்.
கூடலழகர் கோவில் - Koodal Azhagar Temple,
கூடலழகர் கோவில் - Koodal Azhagar Temple,
Updated on

துரை என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தான். ஆனால் மதுரையின் நடுவே வீற்றிருக்கும் கூடலழகர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அழகர் மலையில் இருப்பவர் கள்ளழகர் என்றால் இங்கு இருப்பவரோ கூடல் அழகர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை வைகாசி பௌர்ணமி அன்று நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது தங்கச்சடாரி பக்தர்களின் தலைமீது வைக்கப்பட்டு ஆசி வழங்கப்படுகிறது.

மூலவர் கூடல் அழகர், வியூக நாதர்

உற்சவர் சுந்தரராஜன்

தாயார் மதுரவல்லி, மரகதவல்லி

தல தீர்த்தம் ஹேம புஷ்கரணி

2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 47வது திவ்யதேசமாகத் திகழ்கிறது. இத்தலத்தில் மூலவர் பெருமாள் மூன்று நிலைகளில் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

இக்கோவிலின் முதல் தளத்தில் கருவறையில் கூடல் அழகர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்திலும், அதற்கு மேல் நிலைகளில் (நடு அடுக்கு) சூரிய நாராயணப் பெருமாள் நின்ற கோலத்திலும், மேல் அடுக்கில் ஸ்ரீ ரங்கநாதர் பாற்கடலில் பள்ளி கொண்ட அனந்த சயன கோலத்திலும் (கிடந்த கோலம்) அருள்கின்றனர்.

இக்கோவிலின் மிக முக்கிய சிறப்பம்சமே இதன் கருவறை கோபுரம்தான். கருவறைக்கு மேலே சுமார் 125 அடி உயரம் கொண்ட, அரிதிலும் அரிதான அஷ்டாங்க விமானத்துடன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆரம்பத்தில் பாண்டிய மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டு, பின்பு 16ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு மற்றும் மதுரை நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது.

பெயர்க் காரணம்:

கூடல் என்பது மதுரையின் பழங்காலப் பெயராகும் (மக்கள் கூடும் இடம்). அழகர் என்பது பெருமாளின் அழகிய வடிவத்தைக் குறிக்கும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.

ஒருமுறை மதுரையை வெள்ளம் சூழ்ந்தது. பெருமாள் நகரைக் காப்பதற்கு திருவுளம் கொண்டு நான்கு மேகங்களை ஏவ அவையே நான்கு மாடங்களாக மாறிக்காத்தன. இதனால் நான்மாடக் கூடல் என்றும், கூடல் நகர் என்றும் இந்த ஊருக்குப் பெயர் உண்டானது. மேகங்களை ஏவிய பெருமாள் கூடலழகர் என்று அழைக்கப்படுகிறார்.

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு இவரை வழிபட்டு வேண்ட, அதை சரியான வியூகத்தில் செயல்படுத்தி வெற்றியைத் தேடித் தருவார் என்பது நம்பிக்கை. மதுரை கூடல் அழகர், திருச்சி அன்பில் அழகர் மற்றும் மதுரை கள்ளழகர் என்ற மூன்று அழகர்களில் காலத்தால் மூத்தவர் இவர்.

இக்கோவிலில் உள்ள விமானத்தில் உள்ள சாளரங்கள் மற்றும் சிற்ப படைப்புகள் பிரசித்தமானவை. விமானத்தில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதப் புராணக் கதைகளை விளக்கும் அழகிய சுதைச் சிற்பங்கள் மற்றும் மர சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. திருமண வரம், பிள்ளைப்பேறு, கல்வி மேன்மை, மனநிம்மதி ஆகியவற்றிற்காக இத்தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது.

கூடலழகர் கோவில் - Koodal Azhagar Temple,
கூடலழகர் கோவில் - Koodal Azhagar Temple,Image credit - Gemini

திருப்பல்லாண்டு பிறந்த தலம்:

பெரியாழ்வார் மதுரையில் நடைபெற்ற சமய வாதத்தில் வென்று, பெருமாளின் அழகில் மயங்கி அவருக்கு திருஷ்டி கழிக்க "திருப்பல்லாண்டு" பாடிய வரலாற்று சிறப்புமிக்க தலம் இதுவே ஆகும். இக்கோவில் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. சிலப்பதிகாரம், பரிபாடல், கலித்தொகை மற்றும் மதுரைக்காஞ்சி போன்ற பழம்பெரும் சங்க இலக்கியங்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆடிப்பூரத்தில் வீரபத்திரர் வழிபாடு: தோஷங்கள் நீங்கி வெற்றிகளைத் தரும் வெற்றிலை மாலை ரகசியம்!
கூடலழகர் கோவில் - Koodal Azhagar Temple,

பொதுவாக பெருமாள் கோயில்களில் நவக்கிரக சன்னதி இருக்காது. நவகிரகங்களுக்கு பதிலாக சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். ஆனால் இக்கோவிலில் நவக்கிரக சன்னதி தனி சிறப்பாக அமைந்துள்ளது.

தங்க சடாரி:

வருடத்தில் ஒரு நாள் தங்க சடாரி பொதுவாக பெருமாள் கோயிலில் வெள்ளி அல்லது தங்கம் முலாம் பூசப்பட்ட சடாரி பயன்படுத்தப்படும். ஆனால் இங்கு ஒரு கிலோ எடையுள்ள தங்க சடாரி வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே பக்தர்களுக்கு தலையில் சாற்றப்படும். அந்நாளில் சடாரி தரிசனம் பெற்றால் இறைவனின் அருளும், ஐஸ்வர்யமும் பெருகும் என்று நம்பப்படுகிறது.

தமிழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் ஒரே பெருமாள் கோவில் இதுதான். திருவோணம் அன்று பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

விழாக்கள்:

14 நாட்கள் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவிலின் ஹேம புஷ்கரணி எனும் திருக்குளம் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழாவும் இங்கு பிரபலமானது.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். சிறப்பு நாட்களில் தரிசன நேரம் சற்று மாறுபடலாம்.

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
கூடலழகர் கோவில் - Koodal Azhagar Temple,

எங்குள்ளது?

மதுரை மாநகரின் மையப் பகுதியில் உள்ளது. மதுரை ரயில் நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தத் தொகுப்பின் மூலம் மதுரை கூடலழகர் கோவிலின் அரிய கட்டடக்கலை அதிசயங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் தங்க சடாரி தரிசனத்தின் மகத்துவத்தை முழுமையாக அறிந்து, உங்கள் ஆன்மீகப் பயணத்தை மேலும் பயனுள்ளதாகவும் நிறைவானதாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com