
செப்டம்பர் 07ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும். இந்த கிரகணம் நிகழ உள்ளது. அன்றைய தினம் இரவு 09.57 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 01.26 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைகிறது.
இந்த சந்திர கிரகணம் இரவில் தான் நிகழ்கிறது என்றாலும், அன்றைய தினம் பகல் பொழுதிலேயே கோவில் நடை அடைக்கப்பட்டு, பூஜைகள் நிறுத்தப்பட உள்ளதாக முக்கிய கோவில் நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களிலும் செப்டம்பர் 07ம் தேதி நடை அடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மத்திம கால தீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனமதி இல்லை. மறுநாள் செப்டம்பர் 08ம் தேதி காலை முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 07ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்பட்டு, முக்கிய சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும்.