உயர்தர கல்விக்கு 500 கோடி நிதியை வழங்கும் மஹிந்திரா குழுமம்!

Anandh Mahindhira
Anandh Mahindhira

இந்தியாவின் பெரிய வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது குடும்பம் இந்தக் கல்வி ஆண்டில் 500 கோடிகளை வழங்கவுள்ளதாக உறுதிசெய்துள்ளது.

ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சேர்ந்து ஹைத்ராபாத்தில் ஒரு பல்கலைகழகம் நடத்தி வருகின்றனர். இந்தப் பல்கலைகழகத்தில் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் உயர்தர கல்வியைப் பயின்று வருகின்றனர். ஆனந்த் மஹிந்திரா அவரது பள்ளி படிப்பை தமிழ்நாட்டில் பயின்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்தான் ஆனந்த் மஹிந்திரா சுமார் 500 கோடியை பல்கலைகழக வளர்ச்சிக்கு நிதியாக வழங்கியுள்ளார். இந்த 500 கோடியை பல்கலைகழகத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு முக்கிய பணிகளுக்காகவும் இன்னும் சில கோர்ஸ்களை சேர்ப்பது முதல் பல்கலைகழகத்தை சிறப்பு மையமாக மாற்றுவதற்காகவும்தான்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்திரா மஹிந்திரா பல்கலைகழக்கத்தை மேம்படுத்தத் தனிப்பட்ட முறையில் 50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திரா மஹிந்திர, ஆனந்த் மஹிந்திராவின் தாயார் ஆவார். இந்திரா மஹிந்திராவின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழகத்தை ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகிய துறைகளில் மேம்படுத்துவதற்கு மஹிந்திரா குழுமம் முயற்சி செய்து வருகிறது.

மஹிந்திரா பல்கலைகழகம் 2020ம் ஆண்டு மே மாதம் டெக் மஹிந்திராவின் முன்னாள் துணை தலைவர் வினித் நாயரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைகழகத்தில் தற்போது இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்புகளில் நான்கு மையங்களில் 35 படிப்புகள் உள்ளன. அதேபோல் இதன்கீழ் ஒரு ஐந்து பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
அன்போடு அழைத்த மீனவர் வீட்டில் தேனீர் அருந்தி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Anandh Mahindhira

அந்தவகையில் பல்கலைகழகத்தின் பல ஆசிரியர்களை பணியில் அமர்த்துதல், வசதிகளை கொண்டு வருதல் மற்றும் ஒட்டுமொத்த பல்கலைகழகத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்றப் பணிகளைச் செய்யவுள்ளனர்.

அதேபோல் 2024 முதல் 2025ம் ஆண்டில் சில முக்கிய கோர்ஸ்கள் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் பள்ளி உட்பட இரண்டு கல்வி நிறுவனங்களை நிறுவவுள்ளன. மேலும் தற்போது படித்து வரும் 4,100 மாணவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் முதுகலைப் பட்டம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com