

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூரில் இருந்து எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16866) வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும். அதே போல, எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
கொல்லத்தில் இருந்து எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636) வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வரும்.
அதே போல, எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635) வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
ராமேசுவரத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் வந்தடையும். அதே போல, எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751) வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12760/12759 ) ஜனவரி 1 முதல் பிப்ரவரி 3 வரை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயில் டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 2 வரை மாலை 6.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
எழும்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 22158) டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 03 வரை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் ரெயில் டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 3 வரை காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.