ரே பரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக நிற்கப்போவது யார்? தொடரும் சஸ்பென்ஸ்!

Who will replace Sonia Gandhi in Rae Bareli constituency? suspense!
Who will replace Sonia Gandhi in Rae Bareli constituency? suspense!
Published on

த்திரப் பிரதேசத்தில் உள்ள எண்பது பாராளுமன்றத் தொகுதிகளில் பல்லாண்டுகலாக வி.வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக இருந்து வருகின்றன ரே பரேலி மற்றும் அமேதி தொகுதிகள். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

ஆனால், உ.பி.யில் அமேதி, கேரளாவில் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் தோற்றுப்போனார். அமேதியில் ராகுல் காந்தியை பாஜகவின் அமைச்சரான ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.

ரே பரேலி பாராளுமன்றத் தொகுதி உ.பி.யின் ரே பரேலி மாவட்டத்தில் இருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் ரே பரேலி தொகுதியில் 1967 முதல் 1977 வரை இந்திராகாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2004ம் ஆண்டு முதல் கடந்த 2019 தேர்தல் வரை சோனியா காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதியாக இது விளங்கியது. 77 வயதாகும் சோனியா காந்தி அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.

2014, 2019 பொது தேர்தல்களின்போது உ.பி.யில் வீசிய பாஜக அலையில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்த சூழ்நிலையிலும் கூட, சோனியா காந்தி ரே பரேலி தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்னும் சொல்லப்போனால், 2019 பொது தேர்தலில், உ.பி.யில் காங்கிரஸ் வென்ற ஒரே தொகுதி ரே பரேலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான், தற்போது சோனியா காந்தி போட்டியிடாத சூழ்நிலையில், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப் போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
‘மோடிக்கும் அதிகார ஆசை இருக்கிறது’ அண்ணா ஹசாரே அட்டாக்!
Who will replace Sonia Gandhi in Rae Bareli constituency? suspense!

ரே பரேலி தொகுதியில் மே மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்பாளர்கள் மே மாதம் 3ம் தேதிக்குள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், பாஜகவும் ரே பரோலி தொகுதிக்குத் தங்கள் கட்சி வேட்பாளரை அறிவிக்கவில்லை. அநேகமாக, நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதி என்ற வகையில் பிரியங்கா காந்தி அங்கே போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

இதற்கிடையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்துப் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com