இந்தியாவில் ‘ரோட் ஷோ’ நடத்தும் மாலத்தீவு? காரணம் என்ன?

இந்தியாவில் ‘ரோட் ஷோ’ நடத்தும் மாலத்தீவு? காரணம் என்ன?
Maldives

மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையே  நல்லுறவு இல்லாத நிலையில், மாலத்தீவு இந்தியாவில் ‘ரோட் ஷோ’ நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, ரோட் ஷோ நடத்துவதற்கான காரணம் வெளிவந்துள்ளது.

மாலத்தீவு பிரதமர் முகமது முயிசு பதவியேற்றதிலிருந்தே, இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே உள்ள நல்லுறவு பாதிக்கப்பட்டது. பதவியேற்ற சில நாட்களிலேயே அவர், சீனாவுக்கு சுற்றுலா பயணம் சென்று, அவர்களுக்குள் நல்ல உறவை ஏற்படுத்திக்கொண்டார். அதன்பின்னர், மாலத்தீவில் இருக்கும் இந்திய அதிகாரிகள் வெளியேற வேண்டுமென்பது போல பல விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்தநிலையில்தான், கடந்த ஜனவரி மாதம் இந்திய பிரதமர் மோதி லட்சத்தீவு சென்றிருந்தார். அங்கு சென்ற புகைப்படங்களை, மோதி தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது  அதற்கு மாலத்தீவு இணை அமைச்சர் மோசமான கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இதிலிருந்து இந்தியாவிற்கும், லட்சத்தீவுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.

இதனையடுத்து இந்திய மக்களும் லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்வதை முழுவதுமாகத் தவிர்த்துவிட்டனர். புக்கிங் செய்த ஹோட்டல்கள் எல்லாம் அந்த சம்பவம் நடந்த உடனே ரத்து செய்யப்பட்டன. மற்ற நாடுகளை விட இந்தியாவிலிருந்தே பெரும்பாலான மக்கள் லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நாடுகளில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை எடுத்த கணக்கெடுப்பில், இந்தியாவிலிருந்து வெறும் 37 ஆயிரம் சுற்றுலா பயணிகளே அங்கு சென்றுள்ளனர்.

இதனால் லட்சத்தீவின் சுற்றுலா வருமானம் மிகவும் மோசமான அளவில் சரிந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மன்னிப்பை மறுத்த உச்சநீதிமன்றம்… பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை!
இந்தியாவில் ‘ரோட் ஷோ’ நடத்தும் மாலத்தீவு? காரணம் என்ன?

இதனையடுத்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதருடன் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், “ சுற்றுலாவை மேம்படுத்த மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் பயணிக்க விரும்புகிறோம். இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டுள்ளோம். ஊடகங்களும், Influncer களும் எளிதாக வந்து செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். மாலத்தீவிற்கு இந்தியா ஒரு முக்கியமான சுற்றுலா சந்தையாக இருக்கும் நிலையில், இதனை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், “இந்த பிராந்தியத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என்று கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com