ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது குறித்து மல்லிகார்ஜூன கார்கே பதில்!

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்று ஆம் ஆத்மி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.காங்கிரஸ் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க இல்லையெனில் கூட்டத்தை புறக்கணிக்க நேரிடும் என ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. இது குறித்து அனைத்து கட்சிகளும் காங்கிரசிடம் கேள்வி கேட்க அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து பீகாரில் இன்று நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கூட்டத்தை புறக்கணிக்க நேரிடும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

kejriwal
kejriwal

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புறப்பட்டார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்த காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் ''பா.ஜனதாவிற்கு எதிராக ஒன்றிணைந்து, ஆட்சியில் இருந்து அக்கட்சியை அப்புறப்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் திருத்தம் விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன் முடிவு எடுக்கப்படும்'' என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com