2,85,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

Mango
Mango
Published on

ஒரு மாம்பழத்தின் விலை 2 லட்சத்து 85 ஆயிரம் என்றால், அந்த பழம் என்ன அவ்வளவு சுவையா? என்றுத்தான் கேட்கத் தோன்றும். ஆனால், அதுதான் இல்லை. இந்த மாம்பழம் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமாகும்.

மாம்பழத்திற்காக விநாயகரும் முருகனும் தங்களது பெற்றோர்களால் பெரிதளவில் சோதிக்கப்பட்ட விஷயத்தை யாராலுமே மறக்கமுடியாது. யார் உலகைச் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே மாம்பழம் என்று சொல்லப்பட்டது. அதன்படி, முருகர் தனது மயிலில் ஏறி உலகைச் சுற்றி வந்தார். ஆனால், விநாயகர் தனது பெற்றோரை சுற்றி வந்து, அவர்கள்தான் உலகம் என்று மாம்பழத்தை வென்றார். அந்தக் காலத்திலிருந்து விநாயகருக்கும் மாம்பழத்திற்கும் ஒரு தொடர்பு இருந்துதான் வருகிறது.

அந்தவகையில் வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 6ம் நாள் நேற்று நடைபெற்றது. இந்த நாளில் மாம்பழ திருவிழா நடைபெறும்.

நேற்று மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

அந்த மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 2,85,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மனைவியின் சிலை.. வெடித்தது சர்ச்சை… மார்க் ஜூகர்பெர்கின் கலை ஆர்வம்?
Mango

இந்த தொகை கோயில் நிர்வாகத்திற்கே செல்லும். இது கோவிலின் வளர்ச்சி பணிகளுக்கு உதவி செய்யும் என்பதால், அவர்கள் பெரிய தொகைக்கொடுத்து வாங்க முன்வந்தனர்.

ஆனால், இறுதியில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு மாம்பழத்தை வாங்கியது, விநாயகரின் மாம்பழம் என்பதாலா? அல்லது கோவில் பணி செலவுக்காக மறைமுகமாக கொடுத்ததா? என்பது தெரியவில்லை. எது எப்படியோ? கோவில் நிர்வாகத்திற்கு நல்ல தொகை கிடைத்துவிட்டது. இதுபோல வருடம் ஒரு மாம்பழம் ஏலத்திற்கு விற்கப்பட்டால், வருமானம் ஓஹோ... என்றிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com