​March 31, 2026 deadline
​March 31, 2026 deadline

ரேஷன் கார்டு முதல் ஆதார் வரை: மார்ச் மாத இறுதிக்குள் நீங்கள் முடிக்க வேண்டிய பணிகள்..!

மக்களே...மார்ச் மாத இறுதிக்குள் ரேஷன் கார்டு முதல் ஆதார் வரை செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க..
Published on

மார்ச் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில் ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் அட்டை, PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி மற்றும் ஏடிஎம் மற்றும் வங்கி விதிகளில் மக்கள் செய்ய வேண்டிய முக்கிய விதிமுறை மாற்றங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு குட் நியூஸ் :

கோடைக்காலத்தில் நிலவக்கூடிய கடும் வெப்ப அலைகளின் போது பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல், மே, ஜூன்) தேவையான ரேஷன் பொருட்கள் ஒரே தவணையாக வழங்கப்பட உள்ளன.

கோதுமை கொள்முதல் தொடங்க உள்ளதால், மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய இருப்புகளைக் காலி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த 3 வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்..? ஏப்ரல் 1 முதல் புதிய ATM விதிகள் அமல்..!
​March 31, 2026 deadline

அதேபோல் வரும் மார்ச் 25-ம்தேதிக்குள் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் தங்களின் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யாதபட்சத்தில் உங்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரக் காப்பீட்டிற்கான வரி விலக்கு

வரி செலுத்துவோர் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுக்காகச் செலுத்திய பிரீமியங்களைக் கழித்துக் கொள்ள அனுமதிக்கிறது. நீங்கள் சுகாதாரக் காப்பீட்டில் முதலீடு செய்தால், பிரிவு 80D-இன் கீழ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ரூ.25,000 வரையிலும் (காப்பீடு செய்யப்பட்டவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் ரூ. 50,000), உங்கள் பெற்றோருக்கு ரூ. 75,000 வரையிலும் (காப்பீடு செய்யப்பட்டவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் ரூ.50,000) வரி விலக்கு பெறலாம். நடப்பு நிதியாண்டிற்கான வரிச் சலுகைகளைப் பெற, அத்தகைய பாலிசிகளுக்கான பிரீமியங்களை மார்ச் 31 என்ற காலக்கெடுவிற்குள் நீங்கள் செலுத்த வேண்டும்.

முன்னர் இதுபோன்ற பிடித்தங்களை அறிவிக்கத் தவறிய வரி செலுத்துவோர், வருமான வரி அறிக்கை - யு (ITR-U) இன் கீழ் உள்ள புதுப்பிக்கப்பட்ட படிவ வசதியைப் பயன்படுத்தி தங்கள் படிவங்களைத் திருத்திக் கொள்ளலாம். இருப்பினும், அவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் அதைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஏடிஎம் (ATM) மற்றும் வங்கி விதிகள் மாற்றம் :

புதிய நிதியாண்டு தொடங்குவதால், HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), இந்தியன் வங்கி மற்றும் ஜியோ பேமெண்ட் வங்கி பரிவர்த்தனைகளில் புதிய வசதி மற்றும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.

HDFC வங்கி கார்டு இல்லாமல் யூபிஐ (UPI) மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வசதி, இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கப்படும். இலவச லிமிட் (HDFC ஏடிஎம்-ல் 5 முறை, மற்றவற்றில் 3-5 முறை) தாண்டினால், ஒருமுறை பணம் எடுக்க ரூ.23 பிளஸ் வரி வசூலிக்கப்படும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி பாதுகாப்பு காரணங்களுக்காக டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பண வரம்பை ஒரு லட்சத்திலிருந்து ரூ.50000 - ரூ.75,000 ஆகக் குறைத்துள்ளது.

ஜியோ பேமெண்ட் வங்கி அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளிடம் சென்று கியூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்து கைமாற்றாக ரொக்கப் பணம் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது.

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இனி இலவச வரம்பைத் தாண்டி(மாதம் 5 முறை) மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் தலா ரூ.17 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி (GST) வரி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ கொண்டு வந்துள்ள புதிய விதிகளின்படி ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 60,000 ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை மட்டுமே பணமாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு மேல் ரிவார்ட் பாய்ண்ட்கள் இருந்தாலும் அதனை அடுத்த மாதம் தான் பயன்படுத்த முடியுமே தவிர, அதே மாதத்தில் மாற்ற முடியாது. ஏப்ரல் ஒன்றுக்கு பிறகு இந்த ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை 4,000 மடங்குகளில் மட்டுமே மாற்ற முடியும். அதாவது 4000, 8000 என்ற அளவில் தான் இந்த ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பணமாக மாற்ற முடியும். அதற்கு குறைவாக உள்ள ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை மாற்ற முடியாது. அதேபோல அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 60,000 பாயிண்ட்கள் வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

PF பணத்தை இனி UPI மூலம் எடுக்கும் வசதி :

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தற்போது தங்களது கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறுகின்றனர். இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் தங்களுடைய தொகையை ‘யு.பி.ஐ.’ மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.

அதாவது PF பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அதை டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏ.டி.எம். மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும்.

மாறும் கிரெடிட் கார்டு ரூல்ஸ் :

இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. பணப் பரிவர்த்தனைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்கும், வரி ஏய்ப்பு மற்றும் போலி கணக்குகளைத் தடுப்பதற்கும் மத்திய அரசு மற்றும் வங்கிகள் இணைந்து இந்த மாற்றங்களை கொண்டு வர உள்ளன..

* புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது பான் கார்டு கட்டாயம்

* ஒரு நிதியாண்டில் கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்கமில்லாமல் செலவு செய்தால், அந்த தகவலை வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும்.

* கிரெடிட் கார்டு மூலம் வருமான வரியையும் செலுத்த முடியும்.

* நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் கார்ப்பரேட் கிரெடிட் கார்டை ஊழியர்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தினால், அந்த தொகை அவர்களின் வருமானமாகக் கருதப்பட்டு அதற்கு வரி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

சொத்து பரிவர்த்தனைக்கு பான் கார்டு தேவையில்லை :

ரூ.20 லட்சத்திற்கும் குறைவான அசையாச் சொத்து வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான பரிவர்த்தனைகளுக்கு நிரந்தர கணக்கு எண் (PAN) வழங்க வேண்டிய தேவையை நீக்கும் புதிய வரைவு விதிகளை வருமான வரித்துறை முன்மொழிந்துள்ளது. இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டால், இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

இதையும் படியுங்கள்:
இனி ஆதார் கார்டு-ஐ WhatsApp-பிலேயே டவுன்லோட் செய்யலாம்! எப்படி தெரியுமா..?
​March 31, 2026 deadline

ஆதார் கார்டு லேட்டஸ்ட் அப்டேட் :

ஆதார் கார்டில் சில திருத்தங்களை உங்கள் வாழ்நாளில் குறிப்பிட்ட முறை மட்டுமே செய்ய முடியும் என்று UIDAI தெரிவித்துள்ளது. அதன்படி, பிறந்த தேதி(DOB), பாலினத்தை (Gender), வாழ்நாளில் ஒரே ஒரு முறையும், பெயர் மாற்றத்தை இரண்டு முறையும், முகவரி, மொபைல் எண், கைரேகை, கண் கருவிழி மற்றும் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி திருத்தம் செய்ய வேண்டுமென்றால், மண்டல அலுவலகத்திற்கு (Zonal Office) நேரில் சென்று சிறப்பு அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com