மார்க்கெட்டிங் தெரிந்தவர்களுக்கு ஜாக்பாட்.! சென்ட்ரல் வங்கியில் வேலை.. மொத்தம் 350 பணியிடங்கள்..!!

bank
bankhttps://www.etiquetteschoolofamerica.com
Published on

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அந்நிய செலாவணி அதிகாரி மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பதவிகளுக்கான தகுதிகள், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, வகுப்பு பிரிவு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

வங்கியின் பெயர் : சென்ட்ரல் வங்கி

பதவியின் பெயர் : அந்நிய செலாவணி அதிகாரி மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரி

காலிப்பணியிடங்கள் : 350

இணையதளம் : https://centralbank.bank.in/

பதவியின் பெயர் எண்ணிக்கை

அந்நிய செலாவணி அதிகாரி 50

மார்க்கெட்டிங் அதிகாரி 300

மொத்தம் 350

கல்வித் தகுதி:

வெளிநாட்டுப் பரிவர்த்தனை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். CFA/CA அல்லது சம்பந்தப்பட்ட துறையில் MBA முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வணிக வங்கியில் குறைந்தது ஐந்தாண்டு அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவம் கட்டாயம்.

மார்க்கெட்டிங் ஆபிசர் பணியிடத்திற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கொண்ட MBA / PGDBA / PGDBM / PGPM / PGDM முடித்திருக்க வேண்டும். மற்றும் பணி சார்ந்த அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

  • அந்நிய செலாவணி அதிகாரி பணிக்கு 01.01.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மார்க்கெட்டிங் அதிகாரி பதவிக்கு 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  • எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகின்றன.

சம்பள விவரம் :

  • அந்நிய செலாவணி அதிகாரி பதவிக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.

  • மார்க்கெட்டிங் அதிகாரி பதவிக்கு ரூ.48,480 முதல் ரூ. 85,920 வரை வழங்கபடும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு மொத்தம் 100 கேள்விகளுடன் 100 மதிபெண்களுக்கு நடைபெறும். இதற்கு 60 நிமிடங்கள் வழங்கப்படும். துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (objective test) நடைபெறும் இத்தேர்வில் தவறான பதிலுக்கு நெகட்டிங் மார்க் கிடையாது.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில் தேர்வாகும் நபர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இரண்டு கட்டத் தேர்வு முறையில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

தேர்வு மையம் :

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹175/- செலுத்த வேண்டும். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ₹850/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் இளைஞர்கள் தங்களின் சுயவிவரங்களுடன் https://centralbank.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 3

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க வெங்காரம் சாப்பிட்ட இளம்பெண் மரணம்.. வெங்காரம் என்றால் என்ன..? அதை சாப்பிட்டால் என்னாகும்?
bank

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com