60 வயதில் பிரபல நடிகையை மணந்தார்! அதுவும் 4-வது திருமணமாம்! வைரல் வீடியோ!

60 வயதில் பிரபல நடிகையை மணந்தார்! அதுவும் 4-வது திருமணமாம்! வைரல் வீடியோ!

60 வயதான பிரபல நடிகர், பிரபல நடிகையை நான்காவதாக திருமணம் செய்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1995ல் கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகி, கன்னடம், தெலுங்கு என 150 படங்களுக்கும் மேல் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழில் 'கௌரவம்', 'அயோக்யா', 'கூகுள் குட்டப்பா', 'வீட்ல விஷேசம்' உட்பட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் முதலாவதாக சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்து அவருடன் விவாகரத்து ஏற்பட்டு, பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு சுரேந்தர் பிரசாத் என்பவரை திருமணம் செய்து, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு, அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்நிலையில், நடிகை பவித்ரா லோகேஷ், சமீப காலமாகவே நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபுவை காதலித்து வந்துள்ள நிலையில், சில மாதங்களாக இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று இருவரும் லிப்லாக் முத்தம் கொடுக்கும்படியான வீடியோவை வெளியிட்டு அதை உறுதிப்படுத்தியிருந்தார் நரேஷ்.

இந்நிலையில், தெலுங்கு நடிகரான நரேஷ் - பவித்ரா லோகேஷ் இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியரின் வீடியோ தற்போது ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், இருவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

தெலுங்கு நடிகரான நரேஷ் பாபுவுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், தற்போது நடந்துள்ள இத்திருமணம் 4வது திருமணமாகும். நரேஷ் பாபு, தற்போது 60 வயதில் 4வது திருமணம் செய்துள்ள தகவல்தான் திரையுலகில் ஹாட் டாபிக்.

இவர்களுடைய திருமணத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், 60 வயதில் திருமணம் செய்ததைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்தும் வருகின்றனர்.

தற்போது, இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com