மாருதி சுசுகி இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி துவக்கம்: ரூ. 70,000 கோடி முதலீடு!

Suzuki
Suzuki
Published on

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது புதிய ஹன்சல்பூர் தொழிற்சாலையில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்த புதிய ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஜப்பானின் இந்தியத் தூதர் கெய்ச்சி ஒனோ, சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் தோஷிஹிரோ சுசுகி மற்றும் நிறுவனத்தின் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடக்க விழாவில் பேசிய சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் தோஷிஹிரோ சுசுகி, அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் ரூ. 70,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்தார். "கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியாவின் போக்குவரத்து பயணத்தில் சுசுகி பெருமையுடன் பங்கெடுத்துள்ளது.

இந்தியாவின் நீடித்த பசுமைப் போக்குவரத்துக்கான தொலைநோக்கு பார்வையையும், 'விக்சித் பாரத்' (மேம்பட்ட இந்தியா) திட்டத்திற்கும் தொடர்ந்து ஆதரவளிக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

புதிதாகத் திறக்கப்பட்ட குஜராத் ஆலை, உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையங்களில் ஒன்றாக மாறும் என்றும், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோருக்கு சேவை செய்யும் என்றும் சுசுகி தெரிவித்தார். இந்த ஆலையில் ஒரு வருடத்திற்கு 10 லட்சம் (1 மில்லியன்) வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் முதல் வாகனம் மாருதி சுசுகி இ-விடாரா ஆகும். இது மாருதி சுசுகியின் முதல் பேட்டரி மின்சார வாகனம் (BEV) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின்சார எஸ்யுவி கார் ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இதன் மற்றொரு முக்கிய மைல்கல், இந்தியாவில் முதன்முறையாக லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் செல் உற்பத்தியைத் தொடங்கியது ஆகும். இதற்கான உற்பத்தி, டோஷிபா டென்சோ சுசுகி ஆலையில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு பிடித்ததை செய்துகொண்டே சம்பாதிக்க வேண்டுமா? அப்போ இதை படிங்க!
Suzuki

இந்த பேட்டரிகள், கிராண்ட் விடாரா போன்ற இந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுசுகியின் ஹைப்ரிட் வாகனங்களில் பயன்படுத்தப்படும். ஜப்பானில் இருந்து மூலப்பொருட்கள் மற்றும் சில பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முதலீடுகள் மற்றும் உற்பத்தி துவக்கம், இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com