பாகிஸ்தான் வீரர்கள் படுகொலை; தாலிபான்கள் அட்டகாசம்!

பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தான் வீரர்கள்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பாகிஸ்தான் உள்ள தங்கள் அமைப்பினரை விடுவிக்கக் கோரி, தாலிபான்கள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தான் ராணுவத்தினர் பலர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக தாலிபான்களால் உருவாக்கப்பட்டது  'தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' எனும் அமைப்பு. இந்த அமைப்பு தீவிர மத கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த அமைப்பு பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அமைப்பைச் சேர்ந்த பலர் பாக்கிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்களை விடுவிக்கக் கோரி, பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது  'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்' அமைப்பு நேற்று தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தான் வீரர்கள் பலர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com