Mexico: தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்தது... 9 பேர் பலி!

Mexico Stage collapsed
Mexico Stage collapsed
Published on

வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட மேடை சரிந்து விழுந்து 9 பேர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கையும் முடிந்தது. இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மெக்சிகோ நாட்டிலும் வரும் ஜூன் 2ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

அதன்படி நியூவோலியோன் மாகாணம் சான்பெட்ரோ கார்சா கார்சியா நகரில் மக்கள் இயக்க கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.

அந்த பிரச்சாரத்தில் மக்கள் இயக்க கட்சியின் வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸ் உரையாற்றினார். அந்த சமயத்தில் பலத்த சூராவளி காற்று வீசத் தொடங்கியது. இதன் காரணமாக அந்த பிரச்சார மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அப்போது, அந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 9  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள்:
பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் அபராதம்!
Mexico Stage collapsed

மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். யூவோ லியோன் மற்றும் பிற வட மாநிலங்களில் சூறாவளி வீசக்கூடும் என்று மெக்சிகோவின் வானிலை சேவை முன்னதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு புயல் காரணமாக மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கவர்னர் கார்சியா எச்சரிக்க விடுத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் தனது X தளத்தில், “நான் நன்றாக இருக்கிறேன், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதே முன்னுரிமை.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுத்தொடர்பான வீடியோக்கள் மெக்சிகோவில் உள்ள சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com