இந்தியாவில், அரசு வேலை என்பது உயர்ந்த கௌரவமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பலரும் அரசு வேலையை விரும்புவதற்கு முக்கிய காரணம், பாதுகாப்பு, நிலையான வேலை, சமூக மரியாதை, நல்ல ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் போன்றவைகளாகும். அதேபோல் தனியார் வேலைகளை ஒப்பிடும்போது, அரசு வேலைகளில் வயதானவர்களுக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் இது தனியார் துறையில் ஐம்பது வயதிற்குப் பிறகு கடினமாக இருக்கும். அரசு வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளத்தை (https://www.tn.gov.in/kyg_template_tn/employment.php) பார்த்து அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சத்துணவுப் பிரிவில் காலியாக உள்ள உதவியாளர் (Computer Operator)பணியிடத்துக்கு கணினியில் நல்ல அனுபவம் உள்ள டிகிரி முடித்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை கல்வி மற்றும் கணினி சான்று, மற்றும் முகவரி சான்றுகளுடன் நாளை (அக்டோபர் 6-ம்தேதி) முதல் 13-ம்தேதி வரை நேரிலோ, தபாலிலோ சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடத்திற்கான தகுதிகள் :
* அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
* 2025-ம் ஆண்டு ஜூலை 1-ம்தேதியுடன் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
* கணினியில் Ms.office-ல் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* type writing-ல் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.14000/ ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் 11 மாதத்திற்கு மட்டுமே வேலை இருக்கும். பணியமர்த்தப்படும் பணியாளரின் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு, பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு 11 மாத காலம் முடிவிற்குப்பின் இடைவெளிவிட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும். இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால் பணி நிரந்தரம் செய்யும்படி கோரவோ முடியாது. அதுமட்டுமின்றி இந்த பணிக்கு தமிழ்நாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.