ஐபிஎல் 2026: மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி..!!

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி வாகை சூடியது.
MI vs SRH
MI vs SRH image credit-thestatesman.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

மும்பை அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என 4 புள்ளியுடன் 9-வது இடத்தில் உள்ளது.

ஐதராபாத் அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியதில் 15-ல் மும்பையும், 10 ஐதராபாத்தும் வென்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்ய அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி, அதிரடியாக விளையாடி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com