poland
poland

போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் ராணுவ பயிற்சி… ஒருத்தர் தப்பிக்க முடியாது!

Published on

போலந்து நாட்டில் பாலகனிலிருந்து இளைஞராக மாறிய உடனே அதாவது குறிப்பிட்ட வயது முடிந்தவுடனே அனைத்து ஆண்களுக்கும் ராணுவ பயிற்சி அளிக்கப்படும் என்ற செய்திகள் வந்துள்ளன.

ஒரு நாட்டை காப்பாற்றுவதில் ராணுவ வீரர்கள் பெரும் பங்கை வகிக்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு என்பதால், உடலளவிலும், மனதளவிலும் ராணுவ வீரர்கள் வலிமையாக இருக்க பயிற்சிகள் அளிக்கப்படும். ஆனால், உண்மையில் ராணுவத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் பயிற்சியின் மூலம் எந்த கடினமான வேலைகளிலும் கூட ஈடுபடலாம்.

அந்தவகையில், போலந்து நாட்டில் ஆண்கள் அனைவருக்கும் ராணுவ பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு காரணம் போலந்தில் எப்போது வேண்டுமென்றாலும், போர் ஏற்படலாம் என்றும், ஆகையால், அப்போது ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்ய போரில் 1.3 மில்லியன் ராணுவர்கள் இருக்கிறார்கள். ஆனால், போலந்தில் வெறும் 2 லட்சம் வீரர்களே இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 5 லட்சமாக கூட்டினால் மட்டுமே போர்களின்போது போலந்தை காப்பாற்ற முடியும்.

இதன் அடிப்படையில்தான் போலந்து நாட்டில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் ராணுவ பயிற்சி அளிக்கப்படவுள்ளதாம். 18 முதல் 55 வயது வரை உள்ள அனைத்து ஆண்களும் இந்த ராணுவப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராணுவப் பயிற்சியானது, தற்காப்பு, ஆயுதப் பயிற்சி, போர் தந்திரங்கள் மற்றும் பிற ராணுவ திறன்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த கட்டாய ராணுவப் பயிற்சிக்கு மருத்துவ காரணங்கள் மற்றும் பிற சில குறிப்பிட்ட காரணங்களுக்காக விலக்கு அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மட்டும் ராணுவ பயிற்சி எடுக்க தேவையில்லை.

உலகம் முழுவதும் ஆங்காங்கே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போலந்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கோதுமை நிறம் பொன்னிறமாக...
poland
logo
Kalki Online
kalkionline.com