#BREAKING பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படும்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!!

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்image credit - maalaimaalar.com
Updated on

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருவதால் தினமும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விவாதங்களும் விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே 2 நாட்கள் வார விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். ...

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு.

ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கெனவே உயர்த்திய நிலையில் தற்போது ரூ.3 உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார்.

கறவை மாடுகளுக்கான இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக அவர் அறிவித்தார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com