Lebanon People
Lebanon People

இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்வு!

Published on

சில வாரங்களாக இஸ்ரேல் லெபனான் போர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த வாரம் முதல் ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனானை தாக்கி வருகிறது இஸ்ரேல். தற்போது அமெரிக்கா உட்பட சில உலகநாடுகள் போரை கைவிடும்படி இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியது.

ஆனால் இஸ்ரேல் அதனை நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களின் இராணுவம் ஹிஸ்புல்லாவை முழு பலத்துடன் தாக்கும் என உறுதியாக தெரிவித்தார். தங்களின் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்றும் முதலில் வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம் என்றும் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். ஹிஸ்புல்லா ராணுவ தளபதிகளையும் கமாண்டர்களையும் குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேலில் சைரன் சத்தம் ஒலித்தப்படியே உள்ளது. 

லெபனானில் மக்கள் எங்கையும் தங்க பாதுகப்பான சூழல் இல்லை என்பதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியான முகமது ஹுசைன் ஸ்ரவுர் (Muhammad Hussein Srour) உயிரிழந்தார். இதனையடுத்து சமீபத்தில் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை (29) தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயர்மட்ட இராணுவத் தளபதி அலி கராக்கி மற்றும் மூத்த மதகுரு ஷேக் நபில் கௌக் ஆகியோரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அவரது மகள் பலி!
Lebanon People

இதனையடுத்து பெய்ரூட்டி மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், வான்வழித் தாக்குதல்கள் லெபனானில் நடைபெறலாம் என்பதால், அங்குள்ள மக்களை வெளியேறும்படி பிரதமர் மிகாட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்தத் தொடர் தாக்குதலால், லெபனான் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

logo
Kalki Online
kalkionline.com