சட்டப்பேரவையில் சூடான விவாதம்: சென்னை மேயர் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதால் பரபரப்பு!

"சென்னை மேயர் அரசுடன் ஒத்துழைப்பதில்லை!": சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
aadhav arjuna
aadhav arjunasource: twitter
Updated on

சென்னை மேயர் பிரியா அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சட்டப்பேரவையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேயர் மீது வைத்த குற்றச்சாட்டு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர் பேசியது ஆகியவை தற்போதைய சட்டசபை நிகழ்வுகளில் பரபரப்பை தந்து பொது மக்களிடையே பல்வேறு கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் புதிய ஆட்சியாக தவெக பொறுப்பேற்றது முதல் தமிழக சட்டசபையில் நடக்கும் நிகழ்வுகளை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையேயான விவாதங்கள் வாக்குவாதங்கள் மற்றும் நலத்திட்டங்கள் மீதான கோரிக்கை மற்றும் செயல்பாடுகள் போன்ற அனைத்தையும் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த விவாதங்களில் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமின்றி மக்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில்

இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டியதைத் தொடர்ந்து நடந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் திமுக எம்எல்ஏ கே.என் நேருவின் பேச்சுகள் முக்கியமாக மேயர் மீது குற்றம் சுமத்திய அமைச்சரின் பேச்சு தற்போது வைரலாகி வருகின்றன.

தவெக எம்எல்ஏ தங்கபாண்டியின் குற்றச்சாட்டுக்கு "ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் கூட ரூ.5000 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா பணிகளும் செய்யப்பட்டுள்ளன" என்று திமுக எம்எல்ஏ நேரு பதிலளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா "உள்ளாட்சி துறை இன்றைக்கும் உங்களுடைய கன்ட்ரோலில்தான் இருக்கு. உங்களுடைய மேயர்தான், உங்களுடைய மண்டல பொறுப்பாளர்கள்தான்.உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் " நாங்கள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால் அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர். இந்த அரசு மாறிவிட்டது, அதிகாரம் மாறிவிட்டது, ஆனால் உள்ளாட்சி துறையில் இன்னும் அதிகாரம் மாறாததால் தான் இந்த அரசுடன் மேயர்களுடன், மண்டல பொறுப்பாளர்களும் இணைந்து செயல்படுவதில்லை.

aadhav arjuna
aadhav arjuna image source:thehindu

சென்னையில் இருக்கிற மேயரும் இந்த அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை. குற்றச்சாட்டை மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு. இந்த தேர்தலில் 90 சதவீதம் இல்ல 100 சதவீதம் நாங்கள்தான் ஜெயிக்கப்போறோம். அதை இங்க பதிவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம்" என்றார்.

அமைச்சரின் பேச்சுக்கு பதிலாக "கிட்டத்தட்ட 2500 எம்எல்டி கொடுத்த இடத்தில் 4 ஆயிரம் எம்எல்டி புதிய திட்டங்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஆட்சி அமைந்த பின் நிதி ஒதுக்கீடு நிறுத்தம், மாநகராட்சிகளில் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கருப்பு உடை அணிந்து வந்தனர். மாநகராட்சி மேயர்கள் திமுகவினர் என்றாலும் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது, ஆட்சி அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. உங்களுடைய செயலாளரை அழைத்து எந்தெந்த திட்டத்தில் எல்லாம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை கேளுங்கள். கேட்டு உடனே நடத்தச் சொல்லுங்கள். கவுன்சிலரோ, மேயரோ அரசு சொல்கிற ஒரு திட்டத்தை செயல்படுத்தத்தவறினால் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. ஆணையரே அத்திட்டத்தை செயல்படுத்த சொல்லலாம்" என்று கூறினார் திமுக எம்எல்ஏ நேரு.

இந்த விவாதத்தில் சென்னை மேயர் என்று குறிப்பிட்டு அமைச்சர் சொன்னதே தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் பதவியை கூட திமுகவால் ஜெயிக்க முடியாது எனவும் தவெக எம்எல்ஏ பல்லவியை அவமானப்படுத்திய சென்னையில் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது மேயர் ஆதரவாளர்களிடையே கோபத்தைக் கிளப்பியிருப்பதாகவும் விரைவில் இதற்கான விளைவை மேயர் பிரியாவிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
லோகேஷ் கனகராஜ் நடித்த ‘DC’ திரைப்படத்தின் OTT வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
aadhav arjuna
logo
Kalki Online
kalkionline.com