"எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை" இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!

"எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை" இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

நேற்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். அதற்கு 'அரசு பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பொய்யானது' என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்தபின் தமிழ்நாட்டில் எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். மகளிர் கட்டணமில்லா பயணம் மூலம் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். புதிய பேருந்துகள் 4300 வாங்கப்பட இருக்கின்றன. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன" என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

கட்டணமில்லா பயண திட்டத்தில் இதுவரை 277 கோடியே 13 லட்சம் பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர் இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதலமைச்சருக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு கூட புதிதாக ஆட்கள் எடுக்கப்படவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைக்க, எடப்பாடி பழனிசாமி தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com