

சிறுவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூபாய் 25,000 அபராதம் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த விதிமுறையை மீறும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூபாய் 25,000 வரை அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. அத்துடன் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்றும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு பெற்றோர்களே முழுப் பொறுப்பாவார்கள் என்று தமிழ்நாடு காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அந்த சிறார்கள் ஓட்டிய வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் (RC) ஓராண்டு காலத்திற்கு ரத்து செய்யப்படும் என்றும், வாகனம் ஓட்டிய அந்த சிறாருக்கு, அவர் 25 வயதை அடையும் வரை எந்தவொரு ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் 18 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு வாகனங்களை ஓட்டக் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் நம் நாட்டில் சாலைகளில் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது சர்வ சாதாரணமாக காணப்படும் காட்சியாகும். இதனால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதாகும். இருப்பினும் இந்த விதி பின்பற்றப்படுவதில்லை. சிறுவர்கள் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதனால் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன.
ஒரு பொறுப்பான பெற்றோராக அவர்கள் தங்கள் பிள்ளைகளையும் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு 18 வயதுக்கு குறைவாக இருந்தால் அவர்களிடம் வாகனங்களின் சாவியை கொடுக்காமல் இருப்பது நல்லது. நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு விபத்து ஏற்படும் ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து பார்த்தால் போதும்; பிள்ளைகளுக்கு ஏற்படும் விபத்து என்பது ஒரு மன ரீதியான சவால் மட்டுமல்ல, நிதி சிக்கல்களையும் ஏற்படுத்தும். இருசக்கர வாகன காப்பீடு இருந்தாலும் அது எந்த உதவியும் செய்யாது. ஏனெனில் சிறுவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உங்களால் இழப்பீடு கோர முடியாது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது ஒரு குற்றமாக இருந்தாலும், சட்டத்தை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை சிறுவர்கள் புரிந்து கொள்வதில்லை. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
சிறுவர்கள் வாகனம் ஓட்டும் விதிகள் அல்லது சட்டங்கள் எவ்வளவு தான் கடுமையாக்கப்பட்டாலும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும். எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக எக்காரணத்தைக் கொண்டும் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது. இந்த புதிய சட்ட விதிமுறைகள் மூலம் சிறுவர்களால் ஏற்படும் வாகன விபத்துகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பாக எக்காரணம் கொண்டும் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட விதிமுறைகள் மூலம் சிறார்களின் வாகன விபத்துகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.