ஜூலை 31 தவறிவிட்டதா? கவலை வேண்டாம்: ITR தாக்கல் செய்ய 3 வழிகள் இருக்கு!

ITR தாக்கல் செய்வதற்காக காலக்கெடுவை தவறவிட்டாலும், உங்களால் தொடர்ந்து வருமான வரித் தாக்கல் செய்ய முடியும்.
ITR filing
ITR filingAI Image
Updated on

வரி செலுத்துவோர் தங்கள் ITR-களை சரியான நேரத்தில் தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்காக 30 மில்லியனுக்கும் அதிகமான ITR-கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. கடைசி நேர நெரிசலுக்காகக் காத்திருக்காமல், சரியான நேரத்தில் தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்காக கடைசி தேதி ஜூலை 31-ம்தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஆனால் பலரும் சில காரணங்களால் சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்ய முடியாமல் இருந்திருப்பார்கள். அவர்கள், 'ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதே' என்று கவலைப்படத் தேவையில்லை.

ஜூலை 31 கெடுவைத் தவறவிட்டாலும், உங்களால் தொடர்ந்து வருமான வரித் தாக்கல் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாங்க... ஜூலை 31-க்குப் பிறகும் தாமதமான வருமான வரி கணக்கை (Belated Return) டிசம்பர் 31 வரை தாக்கல் செய்ய முடியும்.

ஜூலை 31 காலக்கெடுவைத் தவறவிட்டதால் வரித் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு முற்றிலும் பறிபோய்விட்டது என்று அர்த்தமல்ல. தகுதியான வரி செலுத்துபவர்கள் தாமதக் கட்டணம் மற்றும் வட்டி செலுத்தி, அனுமதிக்கப்பட்ட காலவரையறைக்குள் தாமதமான வரித் தாக்கல் (Belated Return) தாக்கல் செய்யலாம். அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதைத் திருத்தி திருத்தப்பட்ட வரித் தாக்கல் (Revised Return) தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுள்ளது. இக்காலக்கெடுகளும் முடிந்த பின்னரும் கூட, தகுதியுடையவர்கள் Updated Return தாக்கல் செய்ய முடியும். ஏனெனில், தாமதமாகத் தாக்கல் செய்யும்போது வரி ரீஃபண்ட் தாமதமாவதுடன், வர்த்தகம் அல்லது மூலதன இழப்புகளை (Losses) அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லும் (Carry forward) சலுகையை இழக்க நேரிடும்

அதன்படி, காலக்கெடுவுக்குப் பிறகும் வரித் தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு மாற்று வழிகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் (Income-tax Act 2025), தாமதமாகத் தாக்கல் செய்யும்போது அபராதம் (Late fee), வட்டி, வரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் மற்றும் சில வரிச் சலுகைகளை இழக்க நேரிடும்.

ITR தாக்கல் செய்வதற்காக காலக்கெடுவை (ஜூலை 31) தவறவிட்ட பிறகும் கூட உங்களிடம் இருக்கும் 3 முக்கிய வாய்ப்புகள் குறித்து நிதி வல்லுநர்கள் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட வரித் தாக்கல் (Updated Return - ITR-U)

தாமதமான அல்லது திருத்தப்பட்ட வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முற்றிலும் முடிந்த பிறகும் கூட, சட்டப் பிரிவு 263(6) கீழ், தகுதியான நபர்கள் 'புதுப்பிக்கப்பட்ட வரித் தாக்கல்' (Updated Return - ITR-U) முறையைப் பயன்படுத்தித் தாக்கல் செய்யலாம்.

income tax filing|வருமான வரி
income tax filing|வருமான வரிfreepik

காலக்கெடு: சம்பந்தப்பட்ட வரி ஆண்டைத் தொடர்ந்த நிதியாண்டு முடிந்ததில் இருந்து 48 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

தாமதமான வரித் தாக்கல் (Belated Return)

ஜூலை 31 காலக்கெடுவுக்குள் அசல் ITR-ஐ தாக்கல் செய்யத் தவறியவர்கள், சட்டப் பிரிவு 263(4) கீழ், அபராதம் மற்றும் வட்டியுடன் 'தாமதமான வரித் தாக்கல்' செய்ய முடியும்.

காலக்கெடு: சம்பந்தப்பட்ட வரி ஆண்டு முடிவடைந்ததில் இருந்து 9 மாதங்களுக்குள் அல்லது வரி மதிப்பீடு (Assessment) முடிவதற்குள் (எது முந்தையதோ அதுவரை) தாக்கல் செய்யலாம்.

திருத்தப்பட்ட வரித் தாக்கல் (Revised Return)

தாமதமாகத் தாக்கல் செய்த அறிக்கையிலோ அல்லது அசல் தாக்கலிலோ ஏதேனும் தவறுகள் அல்லது விடுபட்டிருப்பது பின்னர் உங்களுக்கு தெரியவந்தால், சட்டப் பிரிவு 263(5) கீழ், அதைச் சரிசெய்து 'திருத்தப்பட்ட வரித் தாக்கல்' சமர்ப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி வெறும் ரூ.24க்கு ஆன்லைனில் ITR தாக்கல் செய்யலாம்..!
ITR filing

காலக்கெடு: சம்பந்தப்பட்ட வரி ஆண்டு முடிவடைந்ததில் இருந்து 12 மாதங்களுக்குள் அல்லது வரி மதிப்பீடு முடிவதற்குள் (எது முந்தையதோ அதுவரை) திருத்தம் செய்ய அனுமதி உண்டு.

தாமதமாகத் தாக்கல் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்:

உங்கள் மொத்த வருமான அளவைப் பொறுத்து அபராதக் கட்டணம் விதிக்கப்படும்.

உங்கள் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் ரூ.5,000 தாமதக் கட்டணம் (Late Fee) செலுத்த வேண்டியிருக்கும்.

உங்கள் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

செலுத்த வேண்டிய வரி பாக்கி ஏதேனும் இருந்தால், உரிய தேதியிலிருந்து தாக்கல் செய்யும் தேதி வரை மாதத்திற்கு 1% என்ற வீதத்தில் வட்டியும் சேர்த்துச் செலுத்த நேரிடும்.

தாமதமாகத் தாக்கல் செய்யும் போது, வருங்கால ஆண்டுகளில் கணக்கிடுவதற்காக வியாபார இழப்புகளை (Business Losses) அடுத்த வருடங்களுக்குக் கொண்டு செல்ல இயலாது.

முந்தைய ஆண்டுகளின் நட்டங்களை (Losses) இலாத்துடன் சேர்த்து கழித்துக்கொள்ளும் (Carry forward losses) வாய்ப்பை இழக்க நேரிடும்.

அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய வரி ரீஃபண்ட் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

எனவே, ஜூலை 31 தவறிவிட்டாலும், கூடுதல் கட்டணத்துடன் டிசம்பர் மாதத்திற்குள் உங்களது வருமான வரி தாக்கலை விரைவில் முடிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
ITR தாக்கல் 2026: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதால் கிடைக்கும் டாப் 5 பயன்கள்..!!
ITR filing

நீங்கள் தாக்கல் செய்ய அதிகாரப்பூர்வ Income Tax E-Filing Portal தளத்தைப் பயன்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com