Mission Success: நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மண் எடுத்து வந்த சீன ரோபோட்!

Change 6
Change 6 Robot
Published on

கடந்த மாதம் நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மண் எடுத்து வருவதற்கான விண்கலத்தை சீனா நிலாவிற்கு அனுப்பியது. வெற்றிகரமாக அந்த விண்கலம் நிலாவின் இருண்ட பகுதியில் சென்று தரையிறங்கியது. இதனையடுத்து தற்போது இந்த மிஷன் வெற்றியில் முடிந்ததாக செய்திகள் வந்துள்ளன.

நிலவை ஆய்வு செய்வதில் பல ஆண்டு காலமாக பல உலக நாடுகள் ஆர்வமாக இருந்து வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலவை ஆராய்ச்சி செய்வது உலக நாடுகள் மத்தியில் குறைந்துக் கொண்டே வந்தது. இந்த சூழ்நிலையில்தான் இந்தியா சந்திரயான் திட்டத்தை உலக நாடுகள் மத்தியில் வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆம்! தென்துருவத்தில் இதுவரை யாருமே விண்கலத்தை தரையிறக்கவில்லை. ஆனால், இந்தியா முதன்முதலாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி உலக சாதனைப் படைத்தது.

அந்தவகையில் சீனா மற்றொரு திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வந்தது. அதாவது, நிலவின் மற்றொரு பக்கத்திலிருந்து மண்ணை எடுத்து பூமிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வந்தது.

பொதுவாக நிலா பூமியைப் போல தன்னைத் தானே சுற்றிக்கொள்வதில்லை. ஆகையால் அதன் ஒரு பக்கம் மட்டுமே பூமியின் பக்கம் தெரிகிறது. இதனாலேயே உலக நாடுகள் அனைத்தும் அந்தப் பக்கத்தில் மட்டுமே இதுவரை ஆராய்ச்சி செய்து வந்தனர். அதேபோல் நிலவின் அந்தப் பக்கம் மட்டும்தான் விண்கலன்களையும் இறக்கி வந்தனர்.

இப்படி இருக்கையில் மற்றொரு பக்கத்தில் ஆய்வை சீனா தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கு லாங் மார்ச்-5 என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான ராக்கெட் தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏவப்பட்டது. இதில் Chang'e-6 எனும் ஆய்வுக் கருவி (ரோபோட்) இணைக்கப்பட்டிருக்கிறது.

சென்ற மாதம் அந்த கருவி நிலவில் தரையிறங்கிவுள்ளது. இந்த திட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கெடுத்துள்ளனர். எனவே இந்த நாடுகளை சேர்ந்த சில கருவிகளும் இந்த நிலவுக்கு செல்லும் ராக்கெட்டில் இணைக்கப்பட்டிருந்தன.

இதையும் படியுங்கள்:
இனி கேரளா அல்ல, கேரளம் – பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றம்!
Change 6

இந்த கருவி நிலவின் மறுபக்கத்தில் (சூரியனை பார்த்துள்ள பகுதி) தரையிறங்கி, அங்கிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பியுள்ளது. நேற்று இந்த chang'e -6 எனும் விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்துக்கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது." என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com