

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்து மு.க. அழகிரி வாக்களித்தார். வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் களம் சூடாக இருக்கிறது, வெயிலும் அதிகமாக உள்ளது. முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்" என்று கருத்து தெரிவித்தார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அரசியல் செயல்பாடுகளில் குறைவாக இருந்தாலும், தனது வாக்குரிமையை அவர் தவறாமல் செலுத்தி வருகிறார்.