குட் நியூஸ்..!! இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை: வீட்டிலிருந்தே 18 வகையான சேவைகளை பெறலாம்..!

Star 3.0
Star 3.0source:dailythanthi
Published on

புதிய பத்திரப்பதிவு மற்றும் ஆன்லைன் சேவைத் திட்டமான STAR 3.0 திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 18 புதிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இனி பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல், வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு மற்றும் பிற பதிவுச் சேவைகளைப் பெற முடியும் என்று முதல்வர் அறிவித்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே சொத்து (பட்டா) பத்திரப்பதிவு, திருமணப் பதிவுகள், கடன் ஆவணங்கள், கட்டுமானம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் அது சார்ந்த இதர பதிவுகளை ஆன்லைனில் முடிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பழைய முறையில் நிலவிய அதிக நேர விரயம், அலுவலகச் சார்புத் தன்மை, அதிகாரிகளின் நேரடித் தலையீடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற குறைபாடுகளுக்குப் புதிய STAR 3.0 திட்டம் ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய முறைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திட்டத்தின் முக்கியப் பயன்களாக நேரச் சேமிப்பு, அலுவலக நெரிசல் தவிர்ப்பு, ஆவணப் பாதுகாப்பு, போலிப் பத்திரங்கள் தடுப்பு மற்றும் இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்கள் தாங்களே நேரடியாகச் சேவைகளைப் பெறுதல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

STAR 3.0 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 18 முக்கியச் சேவைகள்: வீடு, நிலம், மனைகள் தொடர்பான பத்திரங்களைப் பதிவு செய்தல், பத்திரத்தின் சான்று நகல் (Certified Copy) பெறுதல், வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்தல், விற்பனை ஒப்பந்தம் (Sale Agreement), பொது அதிகாரப் பத்திரம் (Power of Attorney), திருமணப் பதிவு மற்றும் சான்றிதழ் பெறுதல், சொத்து வழிகாட்டி மதிப்பு (Guideline Value) கணக்கீடு, ஆன்லைனில் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்தல், QR Code மூலம் ஆவணச் சரிபார்ப்பு, ஆவண நிலை கண்காணிப்பு (Document Status Tracking), ஆவணத் திருத்தம் (Rectification Deed), குத்தகை/வாடகை ஒப்பந்தப் பதிவு, பத்திர ரத்து (Cancellation of Deeds), உயில் (Will) பதிவு மற்றும் ரத்து, டிஜிட்டல் கையொப்பமிட்ட ஆவணங்கள், குடியிருப்புச் சங்கப் பதிவுகள் மற்றும் முன்பதிவு நேரம் (Online Appointment Booking) உள்ளிட்ட 18 சேவைகள் இத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் நிலைக்கு வரும் போது பொதுமக்கள் பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் போகாமல் வீட்டிலிருந்தே பெறமுடியும். . அலைச்சல் மற்றும் அதிகாரிகளால் அலைக்கழிக்கும் மன உளைச்சல் இன்றி மக்கள் தங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும் வாய்ப்புடன் வெளிப்படைத்தன்மை & டிஜிட்டல் பாதுகாப்பு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பீதியில் மக்கள்..!! புற்றுநோயை உண்டாக்குமா நிலத்தடி நீர்? அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை..!
Star 3.0

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com